டிசம்பர் 21, 1972 -ல் பிறந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் தன்னுடைய ஆரம்பகால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியில் பயின்றார். பின்னர், வணிகவியலில் பட்டம் பெற்றார். இவர் தென்னிந்தியத் திருச்சபை கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி ஆவார்.
ஜெகன் மோகன் ரெட்டி 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், தனது தந்தையின் மறைவுக்கு பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்னும் கட்சியை 2011 -ல் தொடங்கினார். புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ தூரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர், 2011 -ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.
2014 ஆம் ஆண்டு ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முதன்முதலில் அம்மாநில சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. ஆனால், இத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. 175 இடங்களில் 67 இடங்களை மட்டுமே வென்றது. இதனால், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வரானார். இத்தேர்தலில் ஜெகன் மோகன் தோல்வியடைந்தாலும் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
ஒய்.எஸ். ஆர். காங்கிரஸின் முதல் வெற்றி :
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆந்திரபிரதேச முதல்வராக மே,30,2019 -ல் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். இவரர் மீது 2012 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் நடுவண் புலனாய்வுச் செயலகம் சோதனைக்கு உள்ளானார். பின்னர், 16 மாதங்கள் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய திட்டங்கள், மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிதல், தொலைநோக்குப் பார்வை என ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவை கலக்கி வருகிறார். குறிப்பாக, காவலர்களுக்கு வார விடுமுறை, புதிய ஆம்புலன்ஸ் திட்டம் என அடுத்தடுத்து பல புதிய அறிவிப்புகளை அறிவித்தார். ஆந்திர மக்களை மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தார். தமிழ்நாட்டில் பல இடங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
ஜெகன் மோகன் ரெட்டி, தனது 49 -வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். Chennaiyil.com யூ -டியூப் சேனல் சார்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Also Read: அமேசான் நிறுவனம் திரையரங்குகளை குடோன்களாக மாற்றும் அபாயம் : அதிர்ச்சி தகவல்.
Author: Jolna Renga
Published By:Krishna Kumar