1997ல் “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்,நடிகர் சூர்யா.இப்படத்தை இயக்கியது,இயக்குனர்.வசந்த்.எஸ்.சாய்.இவர், மறைந்த இயக்குனர் சிகரம்.கே.பாலச்சந்தரின் சிஷ்சன் ஆவர்.தன் குருநாதரின் போலவே வசந்தும் பல நடிகர்கள்,இயக்குனர்களை அறிமுகம் செய்துள்ளார்.குறிப்பாக சுவலஷ்மி,சிம்ரன்,எஸ்.ஜே.சூர்யா,போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.மேலும்,மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்[கேளடி கண்மணி],அஜித் [ஆசை],பிரசாந்த்&பிரகாஷ்ராஜ் [அப்பு],அர்ஜுன் [ரிதம்], போன்ற வசந்த் படங்கள் மூலமாகத்தான் பிரபலமானார்கள்.அந்த வரிசையில்,நடிகர்.சூர்யாவும் வருவார்.சூர்யாவை வைத்து “நேருக்கு நேர்”,”பூவெல்லாம் கேட்டுப்பார்”,என இருபடங்களை இயக்கினார் வசந்த்.
இந்த இரு படங்களும் சூர்யாவுக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது.”உயிரிலே கலந்தது”,”பிரண்ட்ஸ்”,”நந்தா”,”உன்னை நினைத்து”,”மௌனம் பேசியது”,”காக்க காக்க”,போன்ற படங்கள் மூலமாக பிரபலமானார்.இந்நிலையில்,சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த “சூரரைப் போற்று” படம் ஓடிடியில் வெளியானது.அனைவரின் பாராட்டுக்களை பெற்ற இப்படத்தை,இயக்குனர்.வசந்த் பார்த்து சூர்யாவை,“இந்த பாராட்டு கடிதம் உனக்கில்லை,நெடுமாறன் ராஜாங்கத்திற்க்கு”. என்று தொடங்கும் கடிதம் ஒன்றை பாராட்டி எழுதியுள்ளார்.அதில்,முதல் பிரேமில் இருந்து ரோலிங் டைட்டில் ஓடுகிற கடைசி பிரேம் வரை உன் ஆட்சிதான்… பிரேமுக்கு பிரேம்,சீனுக்கு சீன்,உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய்.தமிழ் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிக சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தி இருந்தாலும் இது இது தான் உன் உச்சம்!இப்போதைக்கு!!!நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை இரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.
முதல் கட்சி ஆரம்பம் கூட பரவாயில்லை இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை.அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிக்கிறது கணல் மணக்கும் பூக்களாக…ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்க்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு.எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக,எதார்த்தமாக துளி கூட மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURYA” என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்து விட முடியும்? ஏனென்றால் என் விதை நீ,என் விருட்சம் நீ, எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சி முகந்து உச்சி முகந்து மகிழ்கிறேன்.என்று எழுதியிருந்தார் இயக்குனர் வசந்த்.”சூரரைப் போற்று” படத்தை பலரும் பாராட்டி இருக்கலாம்.ஆனால், தன்னை அறிமுகப்படுத்திய குருநாதரிடம் பாராட்டினை பெறுவது சூர்யாவுக்கு தனி பெருமைதான்.வசந்த் சூர்யா காம்போ மீண்டும் வரலாமே!