உலக டெஸ்ட் சாம்பியன் தொடர் இறுதி போட்டி : இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறாதது ஏன்?

bhuvaneshwarkumar was not placed in indian team for WTC finals
உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதி போட்டி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.  இந்த இறுதி போட்டி இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. முன்னதாக இங்கிலாந்து உடனான தொடரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. நியூஸிலாந்து அணியும் பாக்கிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடர்களில்  வெற்றிபெற்றது. இந்த இரு அணிகளும் இறுதி தொடரில் பங்குபெறுவது இரு நாட்டு ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.  மேலும், இந்திய அணி 4,445 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 அணியாக உள்ளது.

indian team squad for england tour and WTC final

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துடனான சிறிய டெஸ்ட் தொடரில் பங்குபெறவுள்ளது. அதற்கான இந்திய அணி தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, அஜின்கிய ரஹானே, ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் இடப்பெற்றுள்ளனர். மேலும், ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்பரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.  மேலும், கே.எல்.ராகுல், விரிதமான் சஹா இருவரும் உடற்தகுதி பொறுத்து அணியில் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணி பட்டியலில் புவனேஸ்வர் குமார் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றமளித்துள்ளது. புவி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் பேஸ் பௌலர் புவனேஸ்வர் குமார். கடைசியாக 2018-ல் டெஸ்ட் போட்டியில் பங்குபெற்றார். அதன்பிறகு, காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இவர் முன்னதாக இங்கிலாந்து தொடரில் திறம்பட செயல்பட்டவர். பும்பரா, ஷமி போன்று  இவரும் இந்திய அணிக்கு கிடைத்த மிகசிறந்த பௌலர். இவர் இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்களை எடுத்துள்ளார். அவர் இடம்பெறாதது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது. மேலும், ப்ரித்வி ஷாவும் அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top