Main Menu

What’s New?

Connect With Us

இந்நிலை என்று மாறுமோ|அமைச்சருக்கே நடந்த பரிதாபம்!

Read Carefully
SHARES

 இந்நிலை என்று மாறுமோ|அமைச்சருக்கே நடந்த பரிதாபம்!

tamil-nadu-minister-kamaraj

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் காமராஜ்.இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது,இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில் அமைச்சரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. தற்போது  அவருக்கு “எக்மோதெரபி” சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷயம் என்னனா…..

✱ நேற்று மாலை வரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் இருந்த காமராஜ், “எக்மோதெரபி” சிகிச்சைக்காக சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனை

எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனை

 இதில் இருந்து நமக்கு என்னதெரிகிறது?

✱ “எக்மோதெரபி” சிகிச்சை வசதி,சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இல்லை.

✱  உலகளவில்,தமிழக சுகாதார துறையை குறிப்பாக சென்னை மருத்துவமனைகளை அனைவரும் பாராட்டி,புகழ்கின்றனர்.ஆனால் இன்னமும்  “எக்மோதெரபி” சிகிச்சை போன்ற உயர் சிகிச்சைக்கு தமிழக மருத்துவமனைகள் தயாராகவில்லை என்பது வேதனை தரக்கூடிய  ஒன்று.

எக்மோதெரபி

எக்மோதெரபி

✱ இன்றளவும்,தமிழக அரசு  மருத்துவமனைகளில் காய்ச்சல்,தலைவலி,இருமல்,சளி போன்ற உடல் உபாதைகளின் சிகிச்சைகளை பெறலாமே தவிர, உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை பெற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

✱ முன்பு போல் இல்லாது,ஆண்டுகள் மாற மாற தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளும் மாறியது உண்மைதான். போதிய மருத்துவர்கள்,செவிலியர்கள்,படுக்கை வசதி,நவீன ஸ்கேன் வசதிகள், அதிநவீன தொழில்நுட்பம் என பலவும் கொண்டுவரப்பட்டது இதில் மாற்றுக்கருத்தில்லை.

Tamilnadu Government Multi Super Speciality Hospital

தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

✱ ஆனால், அதனை ஒழுங்காக பராமரிப்பதில்லை.அரசு மருத்துவமனைகளில் தொழில்நுட்பத்தை கையாள்வதற்கு சரியான ஆட்களில்லை.

✱  அதே போல்,சிறப்பு மருத்துவர்கள் அதாவது இதயம்,சிறுநீரகம்,நரம்பியல் போன்ற மருத்துவர்கள் வாரம் இருமுறையோ அல்லது மூன்று முறையோ மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை சந்தித்து சிகிச்சைகளை மேற்கொள்ளுவார்கள்.இதனால் காலதாமதம் ஏற்பட்டு நோய்கள் முத்தியடைகின்றன.சிலர் இதனால் அபாயகரமான கட்டத்திற்கும் சென்றுவிடுகின்றனர்.

✱ பல  உயிர்க்காக்கும் மருந்துகளும் போதிய அளவில் இருப்பதில்லை.வெறும் பராசிட்டமால் மாத்திரைகளை அதிகளவில் இருக்கின்றன.

chennai-rajiv-gandhi-hospital

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை

✱ அறுவைசிகிச்சைக்கு பின் உட்கொள்ளும் வலி நிவாரணி மாத்திரைகளோ அல்லது பிற விலை உயர்வான மாத்திரைகளோ அரசு மருத்துவமனைகளில் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.இதனால் சில நல் உள்ளம் படைத்த அரசு மருத்துவர்கள், நோயாளிகளின் உறவினரிடம் மாத்திரைகளை எழுதிக் கொடுத்து, வெளியில் இருந்து மருந்துகளை கொண்டுவரும் அவலநிலையும் உள்ளது.

✱ அரசு மருத்துவமனைகளில், பணம் கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளும் பிரிவும் வந்து விட்டன,என்பது வருத்தமளிக்கும் செய்தி.

✱ வயிற்றில் 13கிலோ கட்டியினை அகற்றி சாதனை படைத்த அரசு மருத்துவமனை, என்று பத்திரிகையில் இதனை சாதனையாக பார்த்திருக்கின்றோம்.இதுவே பெரிய சாதனையாக எண்ணுகின்றார்கள்,இருக்கட்டும்.இத்தகைய சிகிச்சை பெருமான்மையான மக்களுக்கு கிடைத்துள்ளதா என்றால் கேள்விக்குறியே?

சென்னை-ராஜீவ்-காந்தி-மருத்துவமனை

சென்னை-ராஜீவ்-காந்தி-மருத்துவமனை

✱ தமிழக அரசு மருத்துவமனை சாதனை படைக்கின்றன என்றால்,ஏன் தமிழக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், வசதிப்படைத்தவர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை?

✱ இவ்வளவு ஏன்; அரசு மருத்துவரே தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை மேற்கொள்கிறார்.பணம் இல்லாதவரே அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறார்.

✱ ஆதலால்,இன்னமும் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் அல்லது கூறிய நேரத்தில் மக்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை.

global_health_india

✱ “எக்மோதெரபி” சிகிச்சையை விட்டு விடுவோம், ஆனால் மேலே கூறிய பிரச்சனைகளை நிச்சயம் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

✱ காமராஜ் போன்ற அமைச்சர்கள் யோசித்து இதற்கு நன்கு தீர்வுகளை காணவேண்டும்.


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top