நிவர் புயல் காரணமாக சென்னையில் மழை பெய்து வருகிறது.இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து ஆறு போல் ஓடுகிறது.சென்னை மாநகரில்,நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்கள் சற்று அதிகமாகவே காணப்படும்.கடந்த சில ஆண்டுகாலமாகவே இத்தகைய சீற்றங்கள் வருவதும்,மழை நீர் சாலைகளில் தேங்கி இருப்பதுமாகவே உள்ளது.ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதை அதிகாரிகள் கண்டால்,அடுத்த முறை அவ்விடத்தில் அடுத்தமுறை தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கைகளை மேக்கொள்ளவேண்டாமா?சம்மந்தப்பட்ட துறை அமைச்சர், இது சம்மந்தமாக நடவடிக்கைகளை எடுக்கலாமே?ஒரு முறை நடப்பது எதார்த்தம்,அடுத்தமுறை நடந்தால் அது தவறு.
அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் தவறை எப்போது திருத்திக்கொள்வீர்கள்?சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 73 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையிலும்,சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற முடியாத நிலை என்பது வருத்தமளிக்கிறது.சென்னையை மையப்படுத்தி பல வரிகள் சென்னை மாநகராட்சியினால் வசூலிக்கப்பட்டு வருகின்றன,இருந்தும் இன்னும் சென்னைக்கு குடிநீர்,சாலைவசதி,போக்குவரத்து,சாலைகளில் இது போல் தண்ணீர் தேங்கி நிற்பது போன்ற அடிப்படை உரிமைகளின் பிரச்சனைகளை சந்திப்பது வேதனையை அளிக்கிறது.இது ஒருபுறமிருக்க,
சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை கொடுத்தும்,நடவடிக்கை காணப்படவில்லை என்றால் “லோக் அதாலத்” அதாவது “மக்கள் நீதி மன்றம்”[இலவச நீதிமன்றம்].அங்கு சென்று நடவடிக்கைகளை எடுக்க மனு கொடுக்கலாம்.மக்களாகிய நாமும் அக்கறை எடுத்து “ஒரு குடிமகனாக செயலாற்ற”,வேண்டும்.ஆக,இனி வரும் காலங்களில் அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் இது போல் நடக்காதவாறு,நிரந்தரமாக சாலைகளில் மழைநீரானது தேங்காதவாறு நடவடிக்கைகளை மேக்கொள்ளவேண்டும்.