மக்கள் நீதி மய்யத்தில் மீதியாவது இருப்பார்களா?

மக்கள் நீதி மய்யத்தில் மீதியாவது இருப்பார்களா? 

Former IAS officer Santhosh Babu joins Kamal Haasan's MNM | The News Minute

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான  சந்தோஷ்பாபு விலகியுள்ளார்.

Ex-bureaucrat Santhosh Babu joins Kamal Haasan's MNM after quitting IAS-  The New Indian Express

அக்கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கமல் கட்சியில் இருந்து பத்ம பிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் விலகல் - BBC News  தமிழ்

இது குறித்து சந்தோஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தனது விலகலுக்கு சொந்தக்காரணம் என்று தெரிவித்துள்ளார். கமலுக்கு நன்றி” எனவும்  பதிவிட்டுள்ளார்.

கலாமின் கனவை வென்றெடுக்கவே களம் காண்கிறோம்: பத்மபிரியா- Dinamani

சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் மதுரவாயல் தொகுதி  வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார்.

Padma Priya (Chennai Tamizhachi) Wiki, MNM, Biography, Age, Videos, Images  - News Bugz

இதுகுறித்து பத்மபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `பணம் கொடுத்து விட்டு பாலில் சத்தியம்  வாங்குகிறார்கள்!' கொதிக்கும் மநீம வேட்பாளர் - BBC News தமிழ்

மேலும், என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களே  என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க: 

“தக்டே” புயலால் தமிழகத்துக்கு ஆபத்து வருமா?

இது மக்களின் தோல்வி|மதுரவாயல் தொகுதி!

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top