மீண்டும் வரப்போகுது புதிய தலைமை செயலகம்?

சென்னை ஓமந்தூரார்

மீண்டும் வரப்போகுது புதிய தலைமை செயலகம்?

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் தொடர்பாக நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட முடியாது – தமிழக அரசு வாதம் | வெளிச்சம் தொலைக்காட்சி

கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை ரூ.650 கோடி செலவில் கட்டி முடித்தார். இந்த கட்டடம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஓமந்தூரார் பன்னோக்கு அரசு உயர் மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றப்படுமா? || Tamil News TN Government Multi Super Speciality Hospital again change secretariat

இந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் 2 முறை சட்டசபை கூட்டத்தொடர்களும் நடத்தப்பட்டன. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் புதிய தலைமை செயலக கட்டிடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றினார். சட்டமன்றம் மீண்டும் செயின்ட்  ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது.

புதிய தலைமைச் செயலாளர், உளவுத்துறை ஐ.ஜி, சென்னை போலீஸ் கமிஷனர் யார் யார்? | Race begins for new chief secretary, IG intelligence and chennai police commissioner posts

கடந்த 10 ஆண்டுகளாக கோட்டையில்தான் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல்  போது சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. தொடர்ந்து இப்போது வரை கலைவாணர் அரங்கில்தான் சட்டமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

King's Institute to get infra boost at Rs 2.07 crore - DTNext.in

ஏற்கனவே அந்த வளாகத்தில் பல்வேறு வசதிகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அங்கு கொண்டு வரப்பட உள்ளதால் அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டிக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாகவும், சட்டசபை அரங்கமாகவும் மாற்றப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

King Institute Of Preventive Medicine & Research Centre, Guindy - Coronavirus Testing Centres in Chennai - Justdial

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அண்ணா சாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவமனைக்கான  முழு கட்டமைப்பு இல்லை. இது ஒரு அலுவலகத்துக்கான கட்டமைப்பு. மற்ற அரசு மருத்துவமனைகளை விட மிகவும் குறைவான நோயாளிகளுக்கே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் பராமரிப்பு செலவுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது.

புதிய தலைமை செயலகம் கட்டியதில் 375 கோடி இழப்பு; உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு! | nakkheeran

கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் பட்சத்தில், ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இங்கு மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுபற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த வி‌ஷயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்தே மாற்றத்திற்கான முடிவு வெளியாகும்.

மேலும் படிக்க: 

இனி இதில் புகார் கொடுத்தால் போதும் உடனே நடவடிக்கை|ஸ்டாலின் அசத்தல்!

 

Follow us on :

CHENNAIYIL FACEBOOK | CHENNAIYIL INSTAGRAM | TWITTER CHENNAIYIL

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top