இந்திய அணியில் இடம்பெறாதது ஏன்? தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஏமாற்றம். 

இந்திய அணியில் இடம்பெறாதது ஏன்? தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஏமாற்றம். 

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அதன்பிறகு, இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. அதற்காக கடந்த ஜூன் 2-ஆம் தேதி 20 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டது. சுமார் மூன்றரை மாதம் வரையில் அங்கேயே இந்திய அணி தங்கப்போகிறது. மூன்றரை மாதம் என்பதால் வீரர்களின் குடும்பத்தையும் உடன் அழைத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டன.  விராட் கோலி தலைமையில் அஜின்கிய ரஹானே, ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் இடப்பெற்றுள்ளனர். மேலும், ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்பரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.  மேலும், கே.எல்.ராகுல், விரிதமான் சஹா இருவரும் உடற்தகுதி பொறுத்து அணியில் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டன. அவர்கள் 8 நாட்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்திய அணி ஜூன் 2-ஆம் தேதி இங்கிலாந்து சென்றது. மேலும், அங்குசென்று 10 நாட்கள் தனிமைப்படுகின்றனர். அதன்பிறகே, வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு, டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டியில் பங்கேற்கின்றனர். அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கிடையில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல்., தொடரை இங்கிலாந்தில் நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தற்போது துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா சூழலை அந்நாட்டு கிரிக்கெட் போர்டும், நமது BCCI -ம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், WTC போட்டியில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கும் வீரர்கள் விரக்தியில் உள்ளனர். அதாவது, குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா உள்ளிட்டோர் அணியில் தேர்வுசெய்யப்படவில்லை. இன்னும் சில தினங்களில் இறுதி போட்டி தொடங்கும் நிலையில் இந்த வீரர்கள் அணியில் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

குல்தீப் யாதவ் கூறியதாவது…

 

குல்தீப் யாதவ் தனது ஆராம்ப காலத்தில் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ஆனால், அவரது யுக்தியை புரிந்துகொண்டு எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளை விலாச தொடங்கினர். மேலும், அவரது பந்துவீச்சை மேம்படுத்தவும் இல்லை. இதுவே குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறாததற்கு முக்கிய காரணம். இதுபற்றி குலதீப் யாதவ் கூறியதாவது “இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. இங்கிலாந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவவேண்டுமென நினைத்தேன், ஆனால், அடுத்து வரும் இலங்கை தொடரில் இடம்பெற முயற்ச்சிகளை மேற்கொள்வேன்” என கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கூறியதாவது…

 

மேலும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறார். ஆனால், அவரால் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கமுடியவில்லை. ஐ.பி.எல்., -ல் கொல்கத்தா அணிக்காக விளையாடிவருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதுபற்றி தினேஷ் கார்த்திக் கூறியதாவது “எனது T 20 போட்டியின் திறமைகளை மேலும் மெருகேற்றி அடுத்தடுத்து 2 உலக கோப்பை T20 போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெற முயற்ச்சிப்பேன்” என்றார்.

தற்போது, WTC இறுதி போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் அடுத்து நடைபெறவிருக்கும் இலங்கை அணியுடன் விளையாடவுள்ள தொடரில் பங்குபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் படிக்க: 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top