சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-4

sree-priya-2021

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-4

2-political-symbal

சைதாப்பேட்டை:

அதிமுக, திமுக என சம நிலையில் வென்ற தொகுதி இது. சென்ற தேர்தலில், திமுக சார்பாக போட்டியிட்ட மா.சுப்பிரமணியன் வென்றார். கனிசமான அளவில் நன்மைகளையும் செய்திருக்கிறார். இருப்பிலும், அதிமுக, பாஜக, பாமக என கூட்டணி இருப்பதால் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமிக்கும் ஓட்டுகள் விழும் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால், சுப்பிரமணியனுக்கும் துரைசாமிக்கும் போட்டி வலுக்கிறது. மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும், சினேகா மோகன் தாஸுக்கும் இம்முறை கனிசமான வாக்குகள் சேரும். சைதை துரைசாமி(அதிமுக), மா.சுப்பிரமணியன்(திமுக), ஜி.செந்தமிழ்ன்(அமமுக), சினேகா மோகன் தாஸ்(ம.நீ.ம), பி.சுரேஷ் குமார்(நாம் தமிழர்) மற்றும் 25 சுயேச்சைகள் என மொத்தம் 30 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.

பழ.கருப்பையா

தியாகராயநகர்:

2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக 3000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திமுகவுக்கும் இங்கு வாக்குகள் உள்ளன. ஆனால், மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் பழ.கருப்பையா, அரசியல் அனுபவமிக்கவர், பேச்சளார் 2011ல் நடந்த தேர்தலில், அதிமுக சார்பாக துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அதிமுக, திமுக வேண்டாம். மாற்று சிந்தனை உள்ள, மாற்று தலைமை வேண்டும். என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவரின், பேச்சை கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த தேர்தலில், பழ.கருப்பையா வெல்ல வாய்ப்பு இருக்கிறது. பி.சத்தியநாராயணன்(அதிமுக), ஜெ.கருணாநிதி(திமுக), ஆர்.பரணீஸ்வரன்(அமமுக), பழ.கருப்பையா(ம.நீ.ம), எஸ்.சிவசங்கரி(நாம் தமிழர்) மற்றும் 9 சுயேச்சைகள் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

sree-3

மயிலாப்பூர்:

சென்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி நட்ராஜ் அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் அவரே போட்டியிடுகிறார். தொகுதியில் பல நல்லதுகளை செய்துள்ளார். மக்களிடையே நன் மதிப்பை பெற்றுள்ளார். ஆகையால், 80% அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதி. அதே சமயத்தில், அமமுக இங்கு போட்டியிடுவதால் ஓட்டுக்கள் பிரியும். மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் ஸ்ரீ பிரியா வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதனால், ஸ்ரீ பிரியா, நட்ராஜுக்கு ஒரு சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆர்.நட்ராஜ்(அதிமுக), த.வேலு(திமுக), டி.கார்த்திக்(அமமுக), ஸ்ரீ பிரியா(ம.நீ.ம), கே.மகாலட்சுமி(நாம் தமிழர்) மற்றும் 18 சுயேச்சைகள் என மொத்தம் 23 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.

வாகை சந்திரசேகர்

வேளச்சேரி:

2011ல் அதிமுகவும், 2016ல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. வேளச்சேரி தொகுதி பொருத்தவரை, மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளாகும். இப்பிரச்சனையை இன்று வரை தீர்க்கப்படவில்லை. சாலை வசதி, ரேஷன் கடையில் நடக்கும் முறைக்கேடுகள் என பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. ஆகையால், இப்பகுதி மக்கள் இரு கட்சிகளின் மீதும் அதிருப்தியில் உள்ளனர். இருந்த போதும் 50%  அதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளது. காரணம், சென்ற தேர்தலில் திமுக சார்பாக நட்சத்திர வேட்பாளர் வாகை சந்திரசேகர் போட்டியிட்டு 9000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் மக்களுக்கு அறியாத வேட்பாளர். அதனால், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கலாம் என எண்ணி வாக்களிக்க கூடும். எம்.கே.அசோக்(அதிமுக), அசன் மவுலானா(காங்கிரஸ்)

voting-2021

இவையெல்லாம் கருத்து கனிப்புகள் தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. உங்கள் தொகுதிக்கு யார் நல்லது செய்தார்கள் என்பதனை யோசித்து வாக்களியு ங்கள். யாருமே இது வரை நல்லது செய்யவில்லை என்றால் புதியவர்களுக்கு வாக்களியுங்கள். யார் மீதும் நம்பிக்கை வரவில்லை என்றாலும், நோட்டாவிற்காவது வாக்களியுங்கள். கண்டிப்பாக வாக்களியுங்கள்..!…!

  பகுதி-1

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1

பகுதி-2

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-2

பகுதி-3

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-3

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top