சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-3
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி:
இந்தத்தொகுதியில், திமுக சார்பாக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் நட்சத்திர வேட்பாளராகவும், மு.க.ஸ்டாலினின் மகன் என்கின்ற காரணத்தாலும், திமுகவின் பிரதான தொகுதி என்கின்ற காரணத்தாலும், இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ; ஜெ.அன்பழகன் மக்களுக்கு கொரோனா காலத்தில் நன்மைகளை செய்து இருக்கிறார். அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு இறந்திருக்கிறார். எனவே, அவரின் அபிமானிகளும் அனுதாப ஓட்டும் விலக்கூடும். இதற்கு மேல் என்ன…..உதயநிதிக்குத்தான் வெற்றி வாய்ப்பு. ஏ.வி.ஏ.கசாலி (பாமக), உதயநிதி ஸ்டாலின் (திமுக), எல்.ராஜேந்திரன் (அமமுக), முகமது இத்ரீஸ் (ஐஜேகே), ஜெயசிம்மராஜ(நாம் தமிழர்) மற்றும் 21 சுயேச்சைகள் என மொத்தம் 26 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.
ஆயிரம் விளக்கு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முந்தைய பிரதான தொகுதி. 1989 முதல் 2006 வரை ஸ்டாலின் வென்றுள்ளார். அதன் பிறகு தான் கொளத்தூர் தொகுதிக்கு போட்டியிட்டுள்ளார். கடந்த தேர்தலிலும், திமுகதான் வெற்றி. ஆனால், வென்ற கு.க.செல்வம் தற்போது பாஜகவில், இணைந்து விட்டார். எனவே, திமுகவிற்கு வாக்கு விழுவது சற்று குறைவாகத்தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும், இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குஷ்பு நட்சத்திர வேட்பாளர் என்பதாலும் குஷ்பு, இஸ்லாமியர் என்பதால் கனிசமான இஸ்லாமியர் வாக்கு இவருக்கு வரும் என்று கூறப்படுகிறது. குஷ்பு (பாஜக), என்.எழில்(திமுக), என்.வைத்தியநாதன்(அமமுக), கே.எம்.செரீப்(ம.நீ.ம), ஏ.ஜெ.ஷெரின்(நாம் தமிழர்) மற்றும் 15 சுயேச்சைகள் என மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அண்ணாநகர்:
8 முறை திமுக வென்ற தொகுதி. 1977,1980 ஆகிய இரு தேர்தலில் மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வென்றுள்ளார். 2011 தேத்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட, கோகுல இந்திரா வெற்றிபெற்றுள்ளார். அதே போல் பாஜக, சென்ற தேர்தலில் 8000 வாக்குகளை வென்றுள்ளது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 1000 வாக்குகள் தான். சென்ற தேர்தலில் மட்டும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால் கோகுல இந்திரா வெற்றி பெற்றிருப்பார். ஆகையால், இம்முறை பாஜகவின் ஓட்டு அதிமுகவிற்கு விழும். அதே சமயத்தில் நாம் முன்பே சொன்னது போல், அமமுக, அதிமுகவின் ஓட்டு வாக்கினை பிரிக்கக்கூடும். இதனால், திமுக அதிமுக சம நிலையில் உள்ளது. எஸ்.கோகுல இந்திரா(அதிமுக), எம்.கே.மோகன்(திமுக), கே.என்.குணசேகரன்(அமமுக), வி.பொன்ராஜ்(ம.நீ.ம), எஸ்.சங்கர்(நாம் தமிழர்) மற்றும் 18 சுயேச்சைகள் என மொத்தம் 23 போட்டியிடுகிறார்கள்.
விருகம்பாக்கம்:
2011ல் அதிமுக கூட்டணியில் இருந்த, தேமுதிக இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றது. சென்ற தேர்தலிலும் அதிமுக தான் வென்றுள்ளது. அதிமுகவிற்கு நல்ல வாக்கு சதவிகிதம் உள்ள தொகுதி. ஆகையால், இந்த தேர்தலிலும் அதிமுகவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. அதே போல், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் சினேகன் போட்டியிடுகிறார். இவருக்கு புது வாக்காளர்களின் வாக்குகள் விழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியும் போட்டியிடுவதால், அமமுக+தேமுதிக வாக்குகள் கண்டிப்பாக போகும். இருந்தாலும், அதிமுகவிற்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் மட்டுமே போட்டி நிலவுகிறது. விருகை வி.என்.ரவி(அதிமுக), ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா(திமுக), பி.பார்த்தசாரதி(தேமுதிக), சினேகன்(ம.நீ.ம), டி.எஸ்.ராஜேந்திரன்(நாம் தமிழன்) மற்றும் 22 சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
பகுதி-4 படியுங்கள்:
பகுதி-1
பகுதி-2