சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-2
திரு.வி.க.நகர்-தனி:
2011ல் அதிமுகவும், 2016ல் திமுகவும் சரிசமமாக வென்ற தொகுதி ஆகையால், யார் வெற்றி பெறுவார்கள் என்கின்ற குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், அதிமுக சார்பாக அதன் கூட்டணி கட்சியான தமாகா போட்டியிடுகிறது. அதே போல், திமுக சார்பாக தாயகம் கவி போட்டி இடுகிறார். இவர்கள் இருவரும் இத்தொகுதிக்கு புதியவர்கள். இதனாலும் யார் வெல்வார்கள் என்கின்ற கணிப்பினை செய்ய முடியாத ஒரு சூழல் உள்ளது. கல்யாணி(தமாகா), தாயகம் கவி(திமுக), எம்.பி.சேகர்(தேமுதிக), எஸ்.ஓபேத்(மநீம), டாக்டர் ஆர்.இளவஞ்ஜி(நாம் தமிழர்) மற்றும் 18 சுயேச்சைகள் என மொத்தம் 23 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.

எழும்பூர்-தனி:
திமுகதான் பிரதானமாக இந்த தொகுதியில், வென்று வருகிறது. சென்ற சட்டமன்ற தேர்தலில் வென்ற திமுகாவை சேர்ந்த கே.எஸ்.ரவிச்சந்திரன், தொகுதிக்கு பல நல்லதுகளை செய்துள்ளார். குறிப்பாக, இப்பகுதியில் பூங்கா அமைத்துக்கொடுத்தது இன்றும் மக்களால் பாராட்டப்பெற்றவை. ஆனால், இந்த தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக. ஆகையால், வெற்றி வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தொகுதியில், அதிமுக கூட்டணியை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பி.ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் மக்களுக்கு மிகவும் பரிட்ஷயமானவர், ஆதலால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. பி.ஜான் பாண்டியன்(தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்), இ.பரந்தாமன் (திமுக), டி.பிரபு (தேமுதிக), யு.பிரியதர்ஷினி (ம.நீ.ம), பி.கீதாலட்சுமி (நாம் தமிழர்) மற்றும் 13 சுயேச்சைகள் என மொத்தம் 18 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.
ராயபுரம்:
ராயபுரம் தொகுதி அதிமுகவை சேர்ந்த டி.ஜெயக்குமார் தத்தெடுத்தார் என்றே சொல்லலாம். 1991ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜெயக்குமார்தான் வென்று வருகிறார். அமைச்சராகவும் இருக்கிறார். 1996ல் மட்டும் ஒரே ஒரு முறை மட்டுமே திமுக வென்றுள்ளது. ஆனால், இம்முறை சற்று மாற வாய்ப்புள்ளது. திமுக சார்பாக, ஐட்ரீம் ஆர்.மூர்த்தி போட்டியிடுகிறார். ஜெயக்குமார் தொகுதிக்கு இது வரை ஒன்னும் செய்யவில்லை எனவும், இத்தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளை பட்டியலியிட்டும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால், கடும் நெருக்கடியில் இருக்கிறார் ஜெயக்குமார். ஜெயகுமாருக்கு, மூர்த்தி கடும் போட்டியாளராக இருக்கிறார். அதே போல் இந்த தேர்தலில் அமமுக போட்டியிடுவதால், அதிமுக ஓட்டு பிரியும் எனவும் கூறப்படுகிறது. இதனால், ஜெயகுமாரும் மூர்த்தியும் சம நிலையில் இருக்கிறார்கள். யார் வெல்வார்கள் என எதிர்பார்ப்புகள் உள்ள தொகுதி. டி.ஜெயக்குமார்(அதிமுக), ஐட்ரீம் ஆர்.மூர்த்தி(திமுக), சி.பி.ராமஜெயம் (அமமுக), எஸ்.குணசேகரன் (ம.நீ.ம), எஸ்.கமலி (நாம் தமிழர்) மற்றும் 21 சுயேட்சைகள் என 26 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
துறைமுகம்:
1977 முதல் 2016வரை திமுக இந்த தொகுதியை தக்கவைத்துள்ளது. ஒரே ஒரு முறை 2011ல் அதிமுக சார்பாக போட்டியிட்ட பழ.கருப்பையா வென்றுள்ளார். இந்த தேர்தலிலும் திமுக தக்கவைக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. வினோஜ் பி.செல்வம்(பாஜக), பி.கே.சேகர்பாபு(திமுக), பி.சந்தான கிருஷ்ணன் (அ மமுக), ஏ.ரமேஷ் (ம.நீ.ம), அப்துல் பாசில்(நாம் தமிழர்) மற்றும் 23 சுயேச்சைகள் என மொத்தம் 28 நபர்கள் நிற்கிறார்கள்.
பகுதி-3 படியுங்கள்:
பகுதி-1