சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1

  சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1

சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. ஏறக்கொறைய, ஒவ்வொரு தொகுதியிலையும்  30 துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தங்கள் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

thoppi

ஆர்.கே.நகர்:

ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரை இது அதிமுகவில் கோட்டை என்றே சொல்லலாம். மறைந்த முதல்வர். ஜெயலலிதா அவர்களின் தொகுதியும் கூட. ஜெயலலிதா மறைவின் பிறகு நடந்த இடைத்தேர்தலில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக, அதன் சார்பாக டி.டி.வி.தினகரன் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. தற்போது, டாக்டர்.பி.காளிதாஸ் (அமமுக), ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக), ஜே.ஜே.எபினேசர்(திமுக), ஏ.பாசில்(மக்கள் நீதி மய்யம்), கே.கவுரிசங்கர்( நாம் தமிழர் கட்சி), மற்றும் 26 சுயேச்சைகள் என மொத்தம் 31 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றன. இதில், அமமுக வேட்பாளர் டாக்டர் பி.காளிதாஸ் அவர்களுக்கு, வெற்றி வாய்ப்பு உள்ளன.

dmk-flag

பெரம்பூர்:

ஆரம்ப காலம் முதல், இந்த தொகுதிக்கு திமுக பல நல்ல திட்டங்களை வகுத்திருக்கிறது. அதனை செயலும் படுத்தியுள்ளது. 1971 முதல் திமுகதான் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. திமுவாவின் மீது நன் மதிப்புகளை வைத்துள்ளனர், இத்தொகுதி மக்கள். ஆகையால், திமுக சார்பாக போட்டியிடும் ஆர்.டி.சேகருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இத்தொகுதியில், என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்சி), ஆர்.டி.சேகர்(திமுக), இ.லட்சுமி நாராயணன்(அமமுக), பொன்னுசாமி(மக்கள் நீதி மய்யம்), எஸ்.மெர்லின் சுகந்தி(நாம் தமிழர் கட்சி) மற்றும் 17 சுயேச்சைகள் என மொத்தம் 22 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.

MK_Stalin

 

கொளத்தூர்:

கொளத்தூர் என்று சொல்லாலே நம் நினைவுக்கு வருபவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான். சந்தேகமின்றி மீண்டும் இந்த தொகுதியில் ஸ்டாலின்தான் ஜெயிக்கபோகிறார். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில், தொகுதிக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து குறைகைளை கேட்டு, போதிய உதவிகளை செய்துள்ளார். நமக்கு தெரிந்து பேரிடர் காலத்தில், விரைவாக தொகுதிக்கு செல்லும் ஒரே எம்.எல்.ஏ; இவருதான். மு.க.ஸ்டலின்(திமுக), ஆதிராஜாராம்(அதிமுக), ஜெ.ஆறுமுகம்(அமமுக), ஏ.ஜெகதீஷ் குமார்(மநீம), பெ.கெமில்ஸ் செல்வா(நாம் தமிழர்), மற்றும் 31 சுயேச்சைகள் என மொத்தம் 36 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

2-political-symbal

வில்லிவாக்கம்:

1977, 2001, 2006, 2016, ஆகிய தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது, திமுக. 1980 மாற்று 2011ல் நடந்த தேர்தலில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சென்ற தேர்தலில், வென்ற திமுக வேட்பாளர்  பி.ரங்கநாதனுக்கு இருக்கும் செல்வாக்கு, தற்போதுள்ள வேட்பாளர் வெற்றி அழகனுக்கு இருக்குமா என்பதில் சந்தேகம் தான். இருந்தும், வெற்றி அழகனுக்கு வெற்றி வாய்ப்பு கணிசமாக இருக்குறது. அதே சமயத்தில், அதிமுக வேட்பாளர், ஜே.சி.டி.பிரபாகரையும் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது. ஜே.சி.டி.பிரபாகர்(அதிமுக), ஏ.வெற்றி அழகன்(திமுக), டி.சுபமங்களாம் டெல்லிபாபு(தேமுதிக), ஸ்ரீ ஹரன் பாலா(ம.நீ.ம), ஸ்ரீதர்(நாம் தமிழர்), மற்றும் 18 நபர்கள் சுயேச்சையாக நிற்கிறார்கள். ஆக, மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

 

பகுதி-2 படியுங்கள்:

 

மேலும் படிக்க: 

தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்கத்தெரியாதவர்கள்!

 இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top