முதல் சி.எம் யாருனு தெரியுமா?|யாரு? எந்த கட்சி தெரிஜிக்கணுமா?

agaram-subbarayalu-reddyaar

முதல் சி.எம் யாருனு தெரியுமா?|யாரு? எந்த கட்சி தெரிஜிக்கணுமா?

annadhurai

நம் தமிழ்நாட்ல அண்ணாதுரை லேந்துதான் நமக்கு சி.எம் யார் யார்ன்னு தெரியும். முதல் சி.எம் யார்னு தெரியுமா? தெரிஞ்சிக்கனுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

1855ல பிறந்தவர்தான் அகரம் சுப்பராயுலு ரெட்டியார்’இவர்தான் அன்னிக்கி  இருந்த   சென்னை மாகாணத்தோட  முதல் முதலமைச்சர்.

அகரம் சுப்பராயுலு ரெட்டியார்

சென்னை மாகாணத்துல அப்போ  இரட்டை ஆட்சி முறை நடந்துட்டு இருந்துச்சு அதுக்கு கீழ நடந்த முதல் சட்டமன்ற  தேர்தலுல நீதிக்கட்சி சார்பா போட்டியிட்டார் சுப்பராயலு. அந்த தேர்தல சுப்பராயலு வெற்றி பெற்றார்.

ஆனால், ஏழு மாசம் மட்டும் தான் பதவில இருந்திருக்காரு. அதுக்கு அப்பறம், ஜூலை 1921ல உடல் நலக்குறைவுநாள முதல்வர் பதவியில இருந்து விலகினார். 

reddy

இவர் ஒரு  தெலுங்கர். இருந்தாலும் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர், செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்துல  பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில இளங்கலைப் பட்டமும். அதுக்கு அப்றமா இங்கிலாந்துல போய்  சட்டப் படிப்பும்  படித்தார்.

சுப்பராயுலு 1912 ல  கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகிச்சாறு. ஆரம்ப காலத்துல  இந்திய தேசிய காங்கிரஸ்  உறுப்பினரா இருந்த சுப்பராயலு, 1916 ல காங்கிரச விட்டு விலகிட்டாரு. அதுக்கு அப்றமா  தியாகராய செட்டிடி. எம். நாயர்  தொடங்கிய நீதிக் கட்சியில செந்துட்டாரு.

தியாகராய செட்டி, டி. எம். நாயர்

வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரி சென்னை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப் பட்ட நீதிக் கட்சி குழுவுல இடம் பெற்றிருந்தாரு. 

 கடலூர் மாவட்டம் மலையபெருமாள் அகரம், அப்படிங்கற ஒரு சிறிய கிராமத்துல வாழ்ந்து வந்துருக்காரு. இவரோட வீடு இன்னும் இந்த கிராமத்துலதான் இருக்கு. இவரோடைய நினைவா கடலூர்ல சுப்பராயலு ரெட்டியார் அப்படிங்கற பெயருள ஒரு மண்டபம் இருக்கு.

சுப்பராயுலு ரெட்டியார், நவம்பர் மாசம்  1921ல காலமாய்ட்டாரு.

இந்த வாரம் நாம்ப தமிழ்நாட்டோட  முதல் முதல்வரை பத்தி  பார்த்தோம். அடுத்தவாரம் வேற ஒரு ஆளுமை நபரை பத்தி பாக்கலாம்……

 

மேலும் படிக்க:

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top