Main Menu

What’s New?

Connect With Us

யார் இந்த ராஜாஜி?|Chakravarti Rajagopalachari Memories:

Chakravarti-Rajagopalachari
Read Carefully
SHARES

 யார் இந்த ராஜாஜி?

 

1878ல் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி பிறந்தார். இவர் இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரை  சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைத்தனர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர். 

c-rajagopalachari-with-nehru-and-sardar-patel.j

அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும், சென்னை மாநில முதலமைச்சராகவும், பதவிகளை வகித்துள்ளார். மேலும், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.”பாரத ரத்னா” விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் ஜவர்கலால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959ல் “சுதந்திராக் கட்சி” என்னும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும்  ஈ.வே. இராமசாமியுடன்(பெரியார்)  தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.

rajaji with gandhiji

ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான “குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா” இவர் இயற்றிய பாடலே.

rajaji

இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி தீவிர ஈடுபாட்டு  உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971ம் ஆண்டு, ஆகஸ்ட்  31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தார். இம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-ஜூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Ambedkar_with_C._Rajagopalachari

எழுத்தில் ஆர்வம் கொண்ட ராஜாஜி,பல படைப்புகளை படைத்திருக்கிறார்.அதில் முக்கியமானவை,”தமிழில் முடியுமா”,”திண்ணை ரசாயனம்”,”சக்ரவர்த்தி திருமகன்”,”வியாசர் விருந்து”,”கண்ணன் காட்டிய வழி” ஆகும். வழக்கறிஞர்,எழுத்தாளர்,அரசியல்வாதி, என அனைத்துளையும் கோலோச்சிய சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி 1972ம் ஆண்டு டிசம்பர் 25ல் காலமானார்.அன்று ராஜாஜியின் கனவு திட்டமான “மதுவிலக்கு” இன்று வரை கனவு திட்டமாகவே இருக்கிறது. கனவு நினைவேறுமா?

மேலும் படிக்க: சிகரம் தொட்ட பாலச்சந்தர்|K.Balachander Memorial Day:


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top