அடுத்தாண்டு ஜனவரியில்,கட்சியினை தொடங்குகிறார் ரஜினிகாந்த்,“நான் கட்சி ஆரம்பிக்க போகிறேன்”என்று கூறி, ஒரு நாட்களே ஆகிறது.அதற்குள்,தொடர்ந்து ரஜினியை பற்றியே பேச்சு.அதில் முக்கியமானவை,கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி என்பவரை நியமித்ததுதான்.ஏன்? என்ன காரணம்? அர்ஜுன் மூர்த்தியை பற்றி ஊடகங்கள் விவாதிப்பது ஏன்?அலசுவோம்….
அர்ஜுன்மூர்த்தி, வர்த்தகம், உற்பத்தி, பிராண்ட் கட்டிடம், தொலைத் தொடர்பு மற்றும் என்எப்சி தொழில்நுட்பம் குறித்த அனுபவமும் பரந்த அறிவும் கொண்டவர். அவர், தனது மகள் லட்சுமிதீபாவுடன் சேர்ந்து, என்எப்சி-இயக்கப்பட்ட பண அட்டையை (கட்டண அட்டை) உருவாக்கி அதை சென்னையில் செயல்படுத்தினார். அவரது மகள் லட்சுமிதீபா, “யெல்டி சாப்ட்காம் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.இதனால்,சிறந்த இந்திய தொழில்முனைவோர் இடத்திற்கு உயர்ந்தார்.அதே சமயத்தில்,ஆன்மீகத்துலையும் மிகுந்த ஈடுபாடுக்கொண்டவர்.மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காக பாஜாகாவில் இணைந்தார்.பின்னர்,அவரின் செயல்பாட்டினை பார்த்த பாஜக,அவருக்கு “பாஜகவின் அறிவுசார் கலத்தின் தமிழக மாநிலத் தலைவராக” பொறுப்புகளை கொடுத்தனர்.அதில்,திறம்பட செயலாற்றிய அர்ஜுனன்,ரஜினியுடன் பழக்கம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து ரஜினி தன் கட்சிக்கு,தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனனை நியமித்துள்ளார். ஒரு புதிய கட்சிக்கு, பாஜகவின் உறுப்பினரா ஒருங்கினைப்பாளர்? அப்போது பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறாரா ரஜினி? “இதனால் ரசிகர்கள் அதிருப்தி” என்றெல்லாம் சில ஊடகங்களும்,ரஜினியை விரும்பாத மக்களும் சமூக வலைதலங்களில் எழுதி வருகின்றன.அப்படி பார்க்கப்போனால்,தற்போதுள்ள அதிமுக,திமுக,கங்கிரஸ்,பாஜக போன்ற எல்லாம் கட்சிகளிலும் உண்மையான உறுப்பினர்களா இருக்கின்றார்கள்?அதிமுக உறுப்பினர் திமுகவிலும்,திமுக உறுப்பினர் அதிமுகாவிலும் கட்சி தாவல் இல்லையா?அதே போல் தான்,அர்ஜுனன்னும் தற்போது பாஜகவில் உள்ளார்,நாளை ரஜினி கட்சியில் இருப்பார். இதில் என்ன தவறு?
என் மீது காவி சாயம் பூசாதீர்கள் என்று ரஜினி சமீபத்தில் கூறியுள்ளார்.ஆகையால்,ரஜினி பாஜகாவை மறைமுகமாக ஆதரிக்கிறாரா என்கின்ற பேச்சுக்கே இடமில்லை.”நான் யாரை வேண்டுமானாலும் நிர்வாகிகளாக நியமிப்பேன்.அவர்கள் மன்ற நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை பின்னர் வருத்தப்பட கூடாது.என்று ஆலோசனை கூட்டத்தில் மிக தெளிவாக ரஜினி கூறிவிட்டதால்,அர்ஜுனனை,ரஜினி நியமித்தத்தில் ரசிகர்களுக்கு வருத்தம் வந்திருக்காது.ஆனால்,தன் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ரஜினி கூறினார்.அது மட்டும் மிஸ்ஸிங்…ஆம்! தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனன் இருவருமே வயதானவர்கள்.யாரேனும் ஒரு இளைஞரை நியமித்திருக்கலாம்.