இவர்தான் தளபதி 65 -ன் வில்லனா? வெளியான சூப்பர் தகவல்.

thalapathy65 vllain

தளபதி விஜய் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில், வெளியான மாஸ்டர் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அவரது பவானி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், கடந்த 2020 -ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் விஜயின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. தளபதி 65 -ன் அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். அவர் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 உருவாகிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு ஒரு வீடியோ வடிவில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் விஜய், நெல்சன் திலீப்குமார், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் ஆகியோர் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். நெல்சன் இயக்கத்தில் உருவாவதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 இவர்தான் தளபதி 65 -ன் வில்லனா? வெளியான சூப்பர் தகவல்
இவர்தான் தளபதி 65 -ன் வில்லனா? வெளியான சூப்பர் தகவல்

பிப்ரவரி 27 ஆம் தேதி இப்படத்திற்காக விஜய்யை வைத்து பிரத்யேகமாக போட்டோஷூட் நடத்தப்பட்டது. மேலும், இப்படத்தில் “புட்ட பொம்மா” புகழ்  பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார். தளபதி 65 படப்பிடிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்கவுள்ளது. பெரும்பாலும் படப்பிடிப்பு வெளிநாடுகளிலேயே நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. சமீபத்தில், படத்தின் பூஜை சன் ஸ்டுடியோவில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், Thalapathy 65 -ன் வில்லன் யார் என்ற கேள்வி எழத்தொடங்கியது. விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், வித்யூத் ஜம்வால் இதனை மறுத்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அவர் “நானும் காத்திருக்கிறேன், அதனை செய்வதற்கும் விரும்புகிறேன்” என் கூறியுள்ளார். மேலும், அந்த தகவல் பொய்யானது எனவும் கூறியுள்ளார். வில்லன் யார் என்பது பற்றிய தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க: 

 

 

“என் பேருந்து ஓட்டுனருக்கு நன்றி” : தாதா சாஹேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top