SHARES
சென்னையில் இலவச கழிப்பறை எங்கே?|Exclusive Photos:
சென்னையில், பல இடங்களில் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை பூட்டி காணப்படுகின்றன. சில இடங்களில், இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. சென்னை முழுவதிலும், ஆண்கள், பெண்கள், திருநங்கை என மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இலவச கழிப்பிட வசதிகள் இல்லை. குறைந்தது, மக்கள் அதிகளவில் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில்கள் போன்ற இடங்களிலாவது இருக்கவேண்டாமா?

சென்னை மெரினா கடற்கரையில் பூட்டிய நிலையில் இருக்கும் கழிப்பறை
சென்னையின் அடையாளமாக கருதப்படும், மெரினா கடற்கரையில், துளிகூட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் வந்து செல்கின்றன. அதே போல், வெளிநாட்டு சுற்றுலா பயணியர்களும் வந்து செல்கின்றனர்.இவர்களுக்கு, இலவச கழிப்பறை வசதிகள் இல்லாததால், சிரமப்படுகின்றனர். வெளிநாட்டு பயணியர், நம்நாட்டை என்னவென்று நினைப்பார்கள்?

சென்னை மெரினா கடற்கரையில் பூட்டிய நிலையில் இருக்கும் கழிப்பறை
அடுத்தபடியாக, சென்னையில் பிரசித்திபெற்ற இடமான திருவல்லிக்கேணி “பார்த்தசாரதி கோவில்” அருகே, கோவில் சார்பாக, இலவச கழிப்பறை வசதி செய்யப்பட்டது. ஆனால், இங்கு ஒருவர் அமர்ந்து கட்டணத்தை வசூலித்து வருகிறார். நாம் அவரிடம் காரணத்தை கேட்டோம்…. ‘ மாநகராட்சியினால் பராமரிக்க முடியவில்லையாம்’ அதனால், ஒத்திகை போல் எங்களுக்கு கோவில் நிர்வாகம் கொடுத்து விட்டது. என்றார். அவரின் இத்தகைய பதில் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் முதன்மை மாநகராட்சியாக விலங்கும், சென்னை மாநகராட்சிக்கு பராமரிக்க முடியவில்லையா? கோடி கணக்கில் வரிகள் குவியும், சென்னை மாநகராட்சிக்கா பராமரிக்க முடியவில்லையா?

திருவல்லிக்கேணி
ஆத்திரத்தை வேண்டுமானாலும் அடக்கலாம் ஆனால் **********அடக்கமுடியாது. கோடி கணக்கில் வருமானம் சம்பாதிக்கும் சென்னை மாநகராட்சி இலவச கழிப்பறை வசதியினை செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புகலாகும். தமிழ்நாட்டின் தலைநகருக்கே இத்தகைய கதி என்றால், பிற மாவட்டங்களின் கதி?…?

திருவல்லிக்கேணி
SHARES