கொரோனா அபராத தொகை எங்கே செல்கிறது?|அதனை மக்களுக்கு கொடுங்க!

கொரோனா அபராத தொகை எங்கே செல்கிறது?|அதனை மக்களுக்கு கொடுங்க!

mask

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு கையில் எடுத்திருக்கும் ஒரு விஷயம் “அபராதம்” விதிப்பது. நம் மக்கள் அபராதம் என்றால் மட்டுமே விதிமுறைகளை பின் பற்றுவார்கள். ஹெல்மெட் முதல் கொரோனா வரை பொருந்தும்.

அதே சமயத்தில், வசூலித்த அபராத தொகையை அரசு நல்ல முறையில் மீண்டும் மக்களுக்கே சென்றடைய வேண்டும். 10.4.2021 வரை ரூ.18 கோடி வசூலாகி இருக்கிறது. இந்த அபராத தொகை எங்கே செல்கிறது? இந்த அபராத தொகையானது சென்னை மாநகராட்சிக்கானதா? அல்லது அரசுக்கானதா? யாருக்கானதானாலும் அது வீணாகிவிட கூடாது.

koyembedu-market

கொரோனா அபராத தொகையினை, கொரோனா காரணமாக மூடியிருக்கும் கோயம்பேடு சில்லறை விற்பனையாளர்களுக்கு உதவி செய்யலாம். அவர்களின் குடும்பங்களுக்கு, உணவு போன்ற அத்தியாவசிய உதவிகளை செய்யலாம். கொரோனாவால்  பாதிக்கப்பட்டோருக்கு உதவலாம்.

தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் ஏராளமான வரிகள் வருகின்றன. அது போக அரசுக்கு ‘டாஸ்மாக்’ மூலமாக பல கோடிகள் வருமானம் கிடைக்கிறது. இது தவிர, தற்போது அபராதம் என்கின்ற பெயரில் வருமானம் கிடைக்கிறது.

koyambedu-market-photo

இந்த வருமானத்தையாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

நமது கோரிக்கையும் கூட…..

 

மேலும் படிக்க: 

மற்றவரின் வயிற்றை நிரப்பும் நிர்மல் ராஜ்| தொடர்ந்து சேவை செய்துவருகிறார்:

மாடுகளின் கோட்டையாக மாறும் கோயம்பேடு மார்க்கெட்:

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top