அடுத்து என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு|கொரோனா 2 அலை:

corona-2.0

 அடுத்து என்ன செய்ய வேண்டும் தமிழக  அரசு|கொரோனா 2 அலை:

தமிழகத்தில் ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு விதித்ததற்கே சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தன. ஆகையால் கட்டாயம் கொரோனா அதிகளவில் பாதித்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு தேவைப்படுகிறது.

full-lock-down-in-tamilnadu

ஆனால், முழு ஊரடங்கு வந்தால் மக்களுக்கு தகுந்த நிதி உதவினை செய்யவேண்டும். குறைந்தபட்சம் மாதம்  ரூ.5000 வழங்க வேண்டும். இது தவிர, வீடு வாடகை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தரவேண்டும்.

ஊரடங்கின் போது பாதித்த சிறு,குறு மற்றும் இதர தொழிலாளர்களுக்கு உதவி தொகையினை தர வேண்டும்.

TN_Govt_Logo

கொரோனா பரவல் காலத்துலையும், மக்களுக்காக செய்திகளை சேகரித்து வரும் ஊடக துறைக்கு உதவிகளை செய்ய வேண்டும். நிருபர்கள் கொரோனவால் பாதிப்புக்கு உள்ளானால், சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்க வேண்டும். உயிர் இழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவிகளையும், ஒருவருக்கு அரசு வேலையும் தரவேண்டும்.

அது போல், காவலர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், என இவர்களுக்கும் உதவிகளை செய்ய வேண்டும்.

tamilnadu-repoter

பள்ளி,கல்லூரி மாணவர்கலின் கல்வி கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தகுந்த நெறிமுறைகளை வழங்க வேண்டும். அவர்கள் மனஅழுத்ததில் இருக்கிறார்கள். ஆகையால், அரசு சார்பில் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு உற்சாகப்படுத்தி, நம்பிக்கை கொடுத்து அவர்களை நல்வழி படுத்த வேண்டும்.

 tamilnadu school

தற்போது,கொரோனா கடுமையாக பரவிவரும் நிலையில் தின கூலிக்கு வேலைக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேலைக்கு சென்றால் பெரிய விஷயம். இந்த சம்பாதித்த  சொல்ப பணமும் இவர்கள் ‘டாஸ்மாக்கிற்கு’ கொடுத்து விடுகிறார்கள். ஆகையால், மக்களின் நலனை கருதி ‘டாஸ்மாக்கை’ மூடவேண்டும்.

TN-Liquor

சென்றாண்டு கொரோனா பரவளின் போதும், ஊரடங்கின் போதும் கபசர குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது அது எங்கும் காணமுடியவில்லையே? இதனை அரசு மிக விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கபசர-குடிநீர்

அரசு மருத்துவமனைகளில், போதிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ,சத்தான உணவுகள், துரிதமான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் கோவாக்சின் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பலவும் தட்டுப்பாடுகள் ஏற்படாதவாறு, துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவைகளுக்கு அரசால் போதிய நிதி இல்லையெனில்,

ஆக்சிஜன்

                                         அதற்கும் வழிகள் இருக்கின்றன. ஆம்..!

● ‘டாஸ்மாக்’ மூலம் மட்டும் அரசுக்கு ஒரு நாளுக்கு பல கோடிகள் லாபமாக வருகிறது. இதனை கொண்டு நிதி உதவிகளை வழங்கலாமே?

● அரசு ஊழியர்களின் சம்பளத்தை சற்று குறைத்து வழங்கி, அந்த பணத்தை கொண்டு மக்களுக்கு உதவிகளை செய்யலாமே?

● கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்று கூறி போலீசாரும், அதிகாரிகளும் அபராதங்களை விதிக்கின்றார்கள். இதன் மூலமும் அரசுக்கு பல கோடிகள் வருமானம் வருகின்றன. இந்த பணத்தை கொண்டும் மக்களுக்கு நன்மைகளை செய்யலாமே?

● எம்.எல்.ஏ; எம்.பிகளுக்கு மாத வருமானம் சுமார் ஒன்றை லட்சம். இதனை ஒரு மாதத்திற்கு விட்டு கொடுத்து, மக்களுக்கு நிதிகளாக பயன்ப்படுத்தலாமே?

மேலே கூறிய நான்கு திட்டங்களையும் செயல் படுத்தினால் கொரோனா இரண்டாவது அலைகளில் மக்கள் பாதுகாப்பாக தப்பித்துக்கொள்வார்கள்…

 

மேலும் படிக்க: 

சென்னையில் கோவாக்ஸின் தடுப்பூசிகள் தட்டுப்பாடு|அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இரண்டு மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர் விளக்கம்:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top