Main Menu

What’s New?

Connect With Us

லேசான புயலுக்கே தாங்காத சென்னை|காரணம் என்ன?

Read Carefully
SHARES

ஒரு வழியாக நிவர் புயல் கரையை கடந்து விட்டது.கடந்த 21ம் தேதி முதல் வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்து,நேற்று இரவு 10.45மணிக்கு புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது.அப்போது 145 கிலோ மீட்டர் வேகத்துடன் காற்று வீசியது.கன மழையும் பெய்தது.புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை வரை ஆனது.இதனால் கடலூர்,புதுச்சேரியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.சென்னையை பொருத்தவரை,இங்கு ஒரு மழைக்கே தாங்காது சாலைகளில் மழைநீர் தேங்கியும்,வீடுகளில் நீர் புகுந்தும் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இப்போது வந்துள்ளதோ புயல் கேட்கவாவேண்டும்?….சென்னை ரிப்பன் மாளிகை,வரதராஜபுரம்,மெரினா கடற்கரை,வேளச்சேரி,கொளத்தூர்,கே.கே.நகர்,புரசைவாக்கம்,பெரம்பூர்,வடபழனி,போரூர்,கிண்டி போன்ற பகுதியில் கடும் பாதிப்பானது.

முதல்வர்.எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஒருவாராக்காலமாகவே,பல துரிதமான நடவடிக்கைகளை மேக்கொண்டார்.குறிப்பாக,தாழ்வானப்பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்தி முகாமில் தங்கவைத்தார்.நிவர் புயல் குறித்து அவ்வப்போது ஊடகங்களில்,உடனுக்குடன் அறிவித்து எச்சரிக்கை விடுத்தார்.தேவைக்கு ஏற்ப உணவுகள்,மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி,உறுதிப்படுத்தினார்.அதே போல் “செம்பரம்பாக்கம்” ஏரியை திறந்த போது,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.பாராட்டுக்கள்…..

அதே சமயத்தில்,சென்னையில் ஏரிகளிகளிலும்,குலத்திலும்,மெல்லமெல்ல மக்கள் வீடுகளை கட்டியுள்ளதால் இன்று சென்னைக்கு இத்தகைய நிலைமை.மக்களை மட்டும் இங்கு குறை கூற முடியாது,வீடு கட்ட அனுமதித்த அதிகாரிகள்,அதனை கவனிக்காத ஆட்சியாளர்களும்தான்.போன முறை வெள்ளம் வந்த போது,வெள்ளம் ஏன் இப்பகுதிகளில் வந்தது?வெள்ளம் வந்த இடத்தில்,மும்பு ஏதேனும் ஏரிகள் இருந்தனவா?என ஆய்வுகளை மேற்கொண்டு,விதிகளை மீறிய கட்டிடங்களை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது.

அது இன்று வரை நடைமுறையில் இல்லாது காற்றில் விடப்பட்டுள்ளது.பெரும்பாலான வீடுகள் ஏரிகளில் கட்டப்பட்டவை என்பது வருத்தம் கலந்த உண்மை.ஒரு இடத்தில் நீர் தேங்கி இருந்தால்,அடுத்த முறை அங்கு நீர் தேங்காத வாரு,அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் படிப்பனைகளை கற்பது எப்போது?

ரோட்டில் மரங்கள் விழுந்ததை விட,மின் கம்பங்களே அதிகம்.நிவர் புயலின் தாக்கம் சற்று அதிகம்தான் என்பது மறுக்கமுடியாதது.அதே சமயத்தில்,முறிந்த அனைத்து மின் கம்பங்களும் ,பழுதடைந்து மிகுந்த மோசமான நிலையில் இருந்ததாகவும்,இதனை பலமுறை மின்சாரத்துறைக்கு சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறினர்.தமிழகத்தில் அதிக வருவாய்த்தரும் துறைகளில் மின்சாரத்துறையு ம் ஒன்று.ஆனால் மின்சாரம் சார்ந்த குறையினை தெரிவித்தால்,நடவடிக்கை எடுக்காது அல்லது தாமதம் செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது.ஆதலால்,இனி வரும் காலங்களில் இத்தவறுகள் நடக்காதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இது அரசாங்கத்தையோ,அதிகாரிகளையோ குறைகூற அல்ல.நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே.


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top