என்ன தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்!

தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்…

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்.


6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்.


11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

கர்ம வினைகள் தீர தானங்களும் …. பலன்கள்:

அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.
காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த
செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் .குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
பாய் தானம் செய்வதால் பெற்றவர்களை பெரியவர்களை
புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் .அமைதியான மரணம் ஏற்படும் .
பசு தானம் செய்தால் இல்லத்தின் தோஷங்கள் விலகும்.
பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் விலகும் .குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
அரிசி தானம் செய்தால் பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.
எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும்
செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும்.
பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும்.
குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.
பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும் .
நம்மால் முடிந்த தானங்கள் செய்தால் நமக்கு வளமான வாழ்வு அமைவதோடு , நம் சந்ததிக்கும் நல்ல வளமான நல்வாழ்வு அமையும்.

ஒருவர் கொடுக்கும் சிலவகை தானங்களால் மறு பிறவியில்
அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றைஇங்கு பார்க்கலாம்.

* கல்விக்கு படிப்பற்கு உதவி செய்தால் முன் ஜென்ம பாவங்கள் போகும்.

* திருக்கோவில்களை புனரமைப்பதற்கு உதவி செய்வதால், பூரண
ஆரோக்கியம், உத்தமியான மனைவி, நற்குணம் நிறைந்த குழந்தைகள் கிடைப்பார்கள்.

* தங்கத்தை தானமாக வழங்குவதால், குறைவில்லாத ஐஸ்வரியம்
உண்டாகும்.

* வெள்ளியை தானம் செய்வதால் அழகான சரீரம் கிடைக்கப்பெறுவர்.

* எள் தானம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசி, சந்தான
பாக்கியம், சந்ததி விருத்தி போன்ற நலன்கள் கிட்டும்.

* தானியங்களை தானம் செய்தால், குறைவில்லாத அன்னம் கிடைக்கும்.

* கோமாதா தானம் செய்வதால் உத்தமமான குடும்பத்தின் பிறப்பு,
தாயன்பு வந்தடையும்.

* பிராணிகளின் தாகம், பசியை போக்கினால் நோயற்ற வாழ்வு வந்து
சேரும்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top