இரண்டு மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர் விளக்கம்:

2-mask-cover

 இரண்டு மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர் விளக்கம்:

“சிலருக்கு  மாஸ்க் அணிவதன் காரணமாக, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது;

mask

மாஸ்க் அணிவதால் மூச்சு திணறுகிறது, என்பது 70% மக்களின் மன கற்பனையே!…ஆஸ்துமா, இருதய நோயானிகள் போன்ற மூச்சு பிரச்சனை சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே மாஸ்க் அணிவதன் காரணமாக  மூச்சு பிரச்சனைகள் வரக்கூடும். மருத்துவர்கள் நாங்கள் நாள் முழுவதும் மாஸ்க் அணிகிறோமே. எங்களுக்கு மூச்சு திணறவில்லையே…என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.

tamil-nadu-doctors-wear-mask

மேலும், இரண்டு மாஸ்க் அணிய வேண்டுமா? அதாவது, ஒரு மாஸ்கின் மீது இன்னொரு மாஸ்க் அணிய வேண்டுமா? இரண்டு மாஸ்க் அணிவது மக்களுக்கு தேவைதானா? மற்றும் 16-18 வயதானவர்களுகான தடுப்பூசி பற்றியும் மருத்துவர்கள் கூறியதாவது;

‘ஒரு மாஸ்க் மீது இன்னொரு மாஸ்க் அணிவது தற்போதைக்கு தேவை இல்லை. ஆனால், இது இன்னும் சில நாட்களில் தேவைப்படலாம். அதே போல், மருத்துவர்கள், செவிலியர்கள், போன்றவர்கள் இரண்டு மாஸ்க், அவர்கள் விருப்பினால் போட்டுக்கொள்ளலாம்.

அதே போல் சிலர் ‘என் 95’ மாஸ்க் அணிகிறார்கள். அவர்களுக்கு இரண்டு மாஸ்க் அணிய தேவை இல்லை. துணியால் ஆன மாஸ்க் அணிபவர்கள் கூடுதல் பாதுகாப்பாக இருக்க இரண்டு மாஸ்க் அணியலாம்.

Testing whether uncertified N95 masks are effective | MIT News |  Massachusetts Institute of Technology

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இரண்டு மாஸ்க் அணிந்துக்கொள்வது சற்று கடினம் தான். ஆகையால், அவர்கள் ‘என் 95’ மாஸ்க் அணிந்துக்கொள்வது நல்லது. அவர்கள் கொரோனா வழி முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நுரையீரல் பலவீனமடைந்தால் பலம் பெற நாம் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான 10  உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா...? - Health Diary Info

மக்களாக முன்வந்து, விரும்பினால் இரண்டு மாஸ்க் அணியலாம். வீட்டை விட்டு வெளியே இருக்கும் நேரம் முழுவதும் இரண்டு மாஸ்க் அணிந்துக்கொள்ளலாம். வீட்டிற்குள் பொருட்களை டெலிவரி செய்யும் நபர்கள் யாரேனும் வந்தால், அவர்களிடம் கவனம் தேவை.

mask-pepole

மாஸ்க் அணிவது எந்தளவிற்கு முக்கியமோ அதே போல் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் முக்கியம். 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கவை.

Should India increase Covishield dose gap after Lancet study? — Quartz India

 

அமெரிக்காவில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஆன்டிபாடியை உருவாக்குகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Explainer: What are Antibodies? | Science News for Students

நியூயார்க்கில் 12 வயது முதல் 16 வயது வரையிலான பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களை விட, 12 முதல் 16 வயது வரை இருப்பவர்களுக்கு தடுப்பூசி கூடுதலான ஆன்டிபாடியை உருவாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Chinese study: Antibodies in COVID-19 patients fade quickly | CIDRAP

கூடிய விரைவில் பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும். இதனால், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை விட்டு மறுபடியும் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பிப்பார்கள்.

Coronavirus Vaccine | கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்| Health News in Tamil

இதே போல் இந்தியாவிலும் இது நடக்கும் என்று மருத்துவர்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்கள் மருத்துவர்கள்.

 

மேலும் படிக்க: 

கொரோனா அபராத தொகை எங்கே செல்கிறது?|அதனை மக்களுக்கு கொடுங்க!

 இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top