விஜய்சேதுபதி, தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்கமுடியாத உச்சநட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். ஆரம்ப காலத்தில் புதுப்பேட்டை போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்துள்ளார். 2010-ல் சீனுராமசாமி இயக்கத்தில் “தென்மேற்கு பருவ காற்று” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களின் மூலம் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பிறகு, நானும் ரௌடியதான், சேதுபதி, தர்மதுரை, 96, விக்ரம் வேதா படங்கள் அவருக்கு திருப்புமுனையயாக அமைந்தன. தற்போது, வில்லன் கதாபாத்திரங்களே அவருக்கு பொருந்திவிட்டது என்று சொல்லலாம். சமீபத்தில், விஜயுடன் சேர்ந்து நடித்த “மாஸ்டர்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் அவர் நடித்திருந்த பவானி கதாபாத்திரம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. இதுமட்டுமின்றி, தெலுங்கில் “உப்பண்ணா” படத்திலும் நெகடிவ் ரோலில் நடித்து வரவேற்பை பெற்றார்.
ஹிந்தி, மலையாளம், போன்ற மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. குறிப்பாக, தேசிய விருது பெற்ற அந்தாதுன் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இவரது அடுத்த படமான “மெர்ரி கிறிஸ்துமஸ்” படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான “லாபம்” படம் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. யாதும் ஊரே யாவரும் கேளிர் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுவொரு புறமிருக்க தமிழில் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ராஜினி முருகன்”, “சீம ராஜா” போன்ற படங்களை இயக்கியவர். விஜய்சேதுபதிக்கு இது 46-வது படம் ஆகும். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதாநாயகியாக அணு கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்சேதுபதி இதுவரை 45 படங்களில் நடித்துள்ளார் என்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க:
கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இரட்டை வேடம் : மித்ரன் இயக்குகிறார்.
1 thought on “விஜய்சேதுபதியின் 46-வது படம் : பொன்ராம் இயக்குகிறார்.”
Pingback: இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணமா இதுதானா ?