தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து பொங்கலுக்கு வெளியான படம் “மாஸ்டர்”. வீழ்ச்சியடைந்த திரையரங்குகளின் வாழ்வினை புதுப்பித்த படம் “மாஸ்டர்” என்றே கூறலாம். மிகப்பெரிய ஊரடங்கு காலத்திற்கு பின் மக்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்து வந்து ரசித்து சென்ற படம். கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய 3-வது படம் இதுவாகும்.
படம் வெளியானதிலிருந்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவந்தது. மேலும், படம் 250 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படம் வெளியாகி இன்றுடன் 50 நாள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிரட்டலாக அமைந்திருக்கும். விஜய்க்கும் விஜய்சேதுபதிக்குமான சண்டை காட்சி அதில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த சண்டை காட்சியின் மேக்கிங் விடியோவை தற்போது லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜயும், விஜய்சேதுபதியும் ஜாலியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் நட்பையம், அன்பையும் மிக அழகாக பரிமாறிக்கொண்டுள்ளனர். மேலும், இந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது . மோதல் காட்சி மற்றும் இருவரும் சந்திக்கும் கட்சியும் அதுவாக இருப்பதால் அதனை மாஸ்ஸாக அமைத்திருப்பார் லோகேஷ்.
அந்த விடியோவை தற்போது விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க:
டேய்! சும்மா இர்ரா…எஸ்.ஜே.சூர்யா | செல்வராகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” Sneak Peek.