விஜய் – ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும்  புதிய படம் : இயக்குனர் யார் தெரியுமா?

vijay and jr joins for a new movie

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் விஜய். தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவர் இதுவரை 66 படங்களில் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “தளபதி 65” படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஆஸ்த்ரியாவில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்ட்டே நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது அவ்வப்போது நடப்பது தான். உதாரணமாக, ரஜினி, கமல் இணைந்து நடித்துள்ளனர். பிறகு அதுபோல பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது பெரிதாக நடிக்கவில்லை. விஜய்யும் தனது ஆரம்பகாலத்தில் அஜித்துடன் இணைந்து “ராஜாவின் பார்வையிலே” படத்தில் நடித்துள்ளார். மேலும், சூர்யாவுடன் இணைந்து நேருக்கு நேர், ப்ரெண்ட்ஸ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்,  நடிகர் விஜய்சேதுபதியும் அதனை கடைபிடித்து வருகிறார். மாதவனுடன் “விக்ரம் வேதா”, ரஜினியுடன் “பேட்ட”, விஜய்யுடன் “மாஸ்டர்”, படங்களில் நடித்துள்ளார்.

jr.ntr

முன்னதாக விஜய் “ஜில்லா” என்ற படத்தில் மலையாள திரையுலக சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தவகையில், தற்போது தளபதி விஜய்யும், தெலுங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். -ம் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தை “தெரி”, “மெர்சல்”, மற்றும் “பிகில்” படங்களை இயக்கிய அட்லி இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தற்போது “தளபதி 65” படத்தில் நடித்து வருகிறார். ஜுனியர் என்.டி.ஆர் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர். (RRR) படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்தபிறகு இப்படத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Jr.-NTR-thalapathy vijay

இதற்கான பேச்சுவார்த்தை இருவரிடமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஜுனியர் என்.டி.ஆர் -க்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ளது. இருவரும் இணைந்து நடித்தால் இரு மொழி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக அமையும். விரைவில் இதன் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க:

 

 

அந்நியன் பட ரீமேக் வழக்கு : இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் நோட்டீஸ்.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top