நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம் : வைரலாகும் புகைப்படம். 

vignesh sivan - nayanthara marraige engagement

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான “ஐயா” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றிநடை போடுகிறார். குறிப்பாக, நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர்தான். அதனால்தானோ என்னவோ இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். அப்படியொரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

 

கடந்த 2015-ல் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் நானும் ரௌடியதான்.  அதில்,விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அப்படத்தில் இருந்து சந்தோஷ் சிவனிடம் நெருங்கி  பழகி வந்தார் நயன்தாரா. இதன்மூலம், இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 6 வருடமாக காதலித்து வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.

கடந்த 6 வருடமாக இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். மேலும், ரசிகர்களிடையே இந்த ஜோடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு ரசிகர்களிடம் இருந்து அன்பு கோரிக்கைகளும் வருகின்றன.  இருவரது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம்
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம்

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், Nayanthara விக்னேஷ் சிவனின் மார்பில் கை வைத்தப்படி உள்ளார். கையில் மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார் நயன். மேலும், “விரலோடு உயிர் கூட கோர்த்து” என கேப்ஷன் போட்டுள்ளார். இதன்மூலம், விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

vignesh sivan - nayanthara engagement

ஆனால், இந்த தகவலை பற்றி விக்னேஷ் அல்லது நயன்தாரா தரப்பில் இருந்து  உறுதிப்படுத்தவில்லை. விரைவில், அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது, நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” படத்திலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திலும் நடித்து வருகிறார்.

 

மேலும் படிக்க: 

 

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஷங்கரின் “அந்நியன்” :  விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top