வந்தாச்சு வலிமை அப்டேட்! :  அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம்.

valimai update
 நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “வலிமை”. இப்படம் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிறது.  இப்படம் தொடங்கப்பட்டதிலிருந்தே படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்டுவந்தனர். குறிப்பாக, கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்களிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு நச்சரித்து வந்தனர். ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் “Valimai Update” ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகிவந்தது. ஒருகட்டத்தில், அஜித் ரசிகர்கள் எல்லை மீறி சென்று பல அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டனர்.  பிறகு, அஜித் அவர்கள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
valimai poster
அதில், ரசிகர்கள் மிக கண்ணியத்துடன் இருக்க வேண்டும். உரிய நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் அப்டேட்டை வெளியிடும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, வலிமை அப்டேட் விரைவில் வெளியாகிறது. இதனை, தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, Valimai Update என்ற பெயரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முக்கியத்துவத்தை பற்றி பதிவிட்டார். வாக்களிக்கும் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை வழங்குவதற்கு இதனை பதிவிட்டார். “இதோ வலிமை அப்டேட்…இதையும் ஒரு அப்டேட்டாக எடுத்துக்கொண்டு நேர்மையாக ஒட்டு போடுங்கள் என்று கேப்ஷன் போட்டுள்ளார்.
valimai ajith photos
சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனை குறிப்பிட்டு ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஓட்டில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும், 100% ஓட்டு இந்தியாவின் பெருமை என்றும்  தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறை மீறல்கள் பற்றிய புகார்களை அளிக்க தொலைபேசி என்னையும் வழங்கியுள்ளார்.
valimai update soon
இது ஒருபுறமிருக்க வலிமை படத்தின் உண்மையான Update வெளியாகிறது.  வருகிற மே 1ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தாநாளன்று படத்தின் First Look வெளியாகிறது. இதனால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மே 1 ஆம் தேதியன்று அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.  இத்தகவலை, இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் கார்த்திகேயா போன்றோர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் படிக்க: 

 

சிவகார்த்திகேயன் “டாக்டர்” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு : ரசிகர்கள் அதிருப்தி | ரிலீஸ் எப்போது ?

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

1 thought on “வந்தாச்சு வலிமை அப்டேட்! :  அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம்.”

  1. Pingback: கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இரட்டை வேடம் : மித்ரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top