ஒத்திவைக்கப்பட்ட “வலிமை” அப்டேட்…ரசிகர்கள் ஏமாற்றம்.

Thala Ajith's Valimai Update Postponed due to Covid19 Pandemic

வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ரசிகர்களால் தல என்று செலாமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் பாலிவுட்டை சார்ந்த போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் படம் “வலிமை”. இப்படத்தை H.வினோத் இயக்குகிறார்.  படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். கோபமான அஜித் ரசிகர்களை நாகரீகத்துடன் நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தினார்.

ஒத்திவைக்கப்பட்ட வலிமை அப்டேட்...ரசிகர்கள் ஏமாற்றம்.

அஜித் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சேர்ந்து நல்ல முடிவெடுத்து தக்க சமயத்தில் படத்தின் போஸ்டர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், படத்தின் FIRST LOOK அஜித்தின் பிறந்தாநாளான மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனாவின் 2-ஆம் அலை உச்சத்தில் இருப்பதால் FIRST LOOK போஸ்டர் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு. இதனை தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

valimai update

அதில்,கொரோனா 2-ஆம் அலை சுனாமி போல் தாக்கி வருகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிராத்திப்போம், பாதுகாப்பாக இருப்போம் என தெரிவித்துள்ளார். மேலும், FIRST LOOK வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க:

 

அண்ணாத்த படத்தின் FIRST LOOK எப்போது தெரியுமா? வெளியான சுவாரஸ்ய தகவல்.

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top