விஜயகாந்தை சந்தித்து கதறி அழுத வடிவேலு|ஆறுதல் சொன்ன பிரேமலதா!

விஜயகாந்தை சந்தித்து கதறி அழுத வடிவேலு|ஆறுதல் சொன்ன பிரேமலதா! 

vijayakanth-with-vadivel

நடிகர் வடிவேலு சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் வடிவேலு, ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இருந்த போதும் விஜயகாந்த் மூலம் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் வடிவேலு.

vijayakanth

விஜயகாந்த் நடித்த பல படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்தார் வடிவேலு. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் வடிவேலுவின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். முன்னணி நடிகர்களை காட்டிலும் நகைச்சுவை நடிகரான வடிவேலு அதிக படங்களை கொடுத்தார்.

vadivel-movie

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு, விஜயகாந்தை தரம் தாழ்ந்து விமர்சித்தார். இதனால் சினிமா பிரபலங்கள் பலருமே வடிவேலு மீது அதிருப்தி அடைந்தனர்.

vadivel-movie

அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தேமுதிக பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பிறகு இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் வடிவேலு. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டவுன், நான் 10 வருடமாக லாக்டவுனில் தான் இருக்கிறேன்.

vadivelu-back.

உடம்பில் நடிக்க தெம்பிருந்தும் வாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கி கிடப்பது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமான? என்று பேசி கண்ணீர்விட்டார், வடிவேலு. கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்த மேலும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

vadivelucampaign

அப்போது விஜயகாந்திடம் கண்ணீர் விட்டு அழுது வடிவேலு மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தான் பேசியதெல்லாம் தவறுதான் என்று வடிவேலு கூறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது கேப்டன் ஒன்றும் நினைக்க மாட்டார் என பிரேமலதா அவருக்கு ஆறுதல் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க: 

வேகமெடுக்கும் கொரோனா|தேர்தல் நேரத்தில் அச்சம்!

Upcoming Kollywood Movies | Tamil Films 2021!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top