Main Menu

What’s New?

Connect With Us

வடிவேல் பாலாஜி காலமானார்/ஏன் காலமானார்?/அலசும் chennaiyl.com

Read Carefully

SHARES

1975ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த பாலாஜி,நடிப்பின் மீது ஆர்வம் வந்து சென்னைக்கு பயணித்தார்.அவரின் தோற்றம் நடிகர் வடிவேல் போலவே உள்ளதால் தன்னையும் வடிவேலின் நடை,உடை,பாவனைகளை செய்யத் தொடங்கினார்.அது பாலாஜிக்கு நன்கு பலனை கொடுத்தது.தன் பெயரை வடிவேல் பாலாஜி என்றே மாற்றிக் கொண்டார்.விழா காலங்களில் பல ஊர்களுக்கு சென்று,வடிவேலு போலவே வேடமிட்டு ஆடியும்,பாடியும்,தன் முதல் நடிப்பாற்றலை தொடங்கினார்.அதன் பின் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு,சிரிச்சா போச்சு,அது இது எது,போன்ற நிகழ்ச்சியில் வடிவேல் போலவே நடித்து புகழ் பெற்றார்.பின்னர் 2013ல் “யாருடா மகேஷ்”, 2016ல் “சுட்டப்பழம் சுடாதபழம்” போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 2018ல் “கோலமாவு கோகிலா”படத்தின் மூலமாக பலரின் பாராட்டுகளை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறி வந்த வடிவேல் பாலாஜி,கொரோனா காரணமாக வீட்டிலே முடங்கினார்.கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது.உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் வடிவேல் பாலாஜிக்கு திடீர் என பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.என்ன கொடுமை இது…..?! இதைவிட கொடுமை சிகிச்சைக்கு பணம் இல்லாததால் வடிவேல் பாலாஜியை தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று உள்ளனர் அவரது குடும்பத்தினர்.இதில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று[10.9.2020] காலமானார்.அவருக்கு வயது 45,இதனால் தமிழ் திரையுலகம் மிகுந்த சோகத்தில் உள்ளது.பலரும் செல்பி வீடியோ எடுத்து கண்ணீர் மல்க வடிவேல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றன.

“தமிழ் சினிமா பிரபலங்களே!”

நீங்கள் அரசியலுக்கு வந்து மக்களை காப்பாற்ற வேண்டாம்.வடிவேல் பாலாஜியை போல இருப்பவர்களை காப்பாற்றுங்கள்.

“தமிழ் சினிமா சங்கத்தினர்களே!”

நீங்கள் சண்டைகளை போடுவதை விட்டுவிட்டு வடிவேல் பாலாஜியை போன்ற நலிந்த நடிகர்களை காப்பாற்றுங்கள்.

“தமிழக அரசு மற்றும் அதன் சார்ந்த அமைச்சர்களே!”

தமிழ் சினிமா மூலமாக பல கோடி வருவாய் வருகின்றது,வரிகள் மூலமாக பல கோடிகள் வருமானம் வருகிறது.வடிவேல் பாலாஜியை போன்ற நடிகர்களுக்கு ஏன் ஒரு காப்பீடு திட்டம் கொண்டுவரக்கூடாது?வருமானம் இன்றி இருக்கும் நடிகர்களுக்கு ஏன் ஊக்கத்தொகையோ, அல்லது வேறேதாவது தொகையினையோ கொடுத்து உதவனாமே?

இனி ஒரு வடிவேலு பாலாஜி இறக்காமல் இருக்க இந்த மூவர் கையில் தான் உள்ளது!

அதே போல் நடிகர்களும் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்தல் நல்லது,படப்பிடிப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை என்பது நன்கு புரிகிறது.அதற்காக மது,புகை,போன்ற உடல் தீங்கான செயல்களை செய்வது உடல் நலனை பாதிக்கும்.இதனை விட்டுவிட்டு பாடல்களை கேட்பது,படங்களை பார்ப்பது,யோகா செய்வது,போன்ற நல்ல செயல்களை செய்தால் நல்லது.[வடிவேல் பாலாஜியை பற்றி தெரியவில்லை இது பொது அறிவுரை]

நடிகர் வடிவேல் போல் பாலாஜிக்கு தோற்றம் வந்தது கடவுளின் அனுகிரகம்

ஆனால்…

நடிகர் வடிவேல் போல் பாலாஜி சாதிக்காமல்,குறைந்த வயதில் மறைந்தது கடவுளின் மோசமான செயலாகும்……

Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top