மழை நீரில் மிதங்கும் வடபழனி பேருந்து நிலையம்|அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஞாயிற்று கிழமை பெய்த மழையால் சென்னை முழுவதும் மழை நீர் சூழ்ந்தது.சென்னை வடபழனி பேருந்து நிறுத்தத்தில் மழை நீர் தேங்கியதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.இதன் மூலம் நோய் தொற்று அபாயமும் காணப்பட்டது.சென்னை நகரங்களில் மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் அதிகமாக கூடுமிடம் வடபழனி பேருந்து நிலையம் தான்.மேலும் பேருந்து நிலையம் அருகிலேயே “விஜயா மருத்துவமனை” இருப்பதால் இங்கு கூட்டம் அலைமோதும்.வடபழனி முக்கிய நகரமாகும்,முருகன் கோவில்,ஏ.வி.எம்., விஜயா, வாகினி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற‌ தமிழ்த் திரையுலகின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற சரவண பவன் உணவகம், தன் தலைமையகத்தை வ‌ட‌ப‌ழனியில் அமைத்துள்ளது.

கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்.) தன் அலுவலகத்தை வடபழநியில் அமைத்துள்ளது. என்.எஸ்.கே. சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஸா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும். ‘ஃபோரம் விஜயா’ என்ற பிரம்மாண்டமான, வணிக நிறுவனங்கள் அடங்கிய வளாகம் ஒன்றும் வடபழனியில் உள்ளது.புகழ் பெற்ற தனியார் பல்கலைக்கழகமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், அதன் வளாகத்தை, வ‌ட‌ப‌ழனியில் கொண்டுள்ளது.மேற்கு சிவன் கோவில் தெருவில் அப்போலோ நிறுவனத்தின் டிப்ளமோ கல்லூரி உள்ளது.இப்படியாக வடபழனியின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்விடத்தில்,பேருந்து நிறுத்தத்தில்,மக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு,மழை நீர் தேங்கியிருப்பதை என்னவென்று கூறுவது?“மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு” 2.75 கோடி வருவாய் ஒரு நாளுக்கு மட்டும் வருகிறது.மாதம் 85.25 கோடி வருவாய்யும்,1023 கோடியும் வருவாய் ஆண்டுக்கு  வருகிறது.இருப்பிலும் வடபழனி பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியிருப்பதை அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் கவனிக்காது இருப்பது வேதனை அளிக்கிறது.நம் இது  Chennaiyil.com சம்மந்தமாக 044-23624416 என்கின்ற வடபழனி டிப்போர்ட் அதிகாரிடம் தொடர்ப்புக்கொண்டு பேசினோம்.“நாங்கள் மீட்டிங்கில் உள்ளோம் பிறகு தொடர்புக் கொள்கிறோம்,என கூறினார்.இனியும் தாமதிக்காமல் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top