Main Menu

What’s New?

Connect With Us

42,947 பேருக்கு தடுப்பூசி செலுத்தியாச்சு|யாருக்கும் பக்க விளைவுஇல்லையாம்!

Read Carefully
SHARES

42,947 பேருக்கு தடுப்பூசி செலுத்தியாச்சு|யாருக்கும் பக்க விளைவுஇல்லையாம்! 

உலகளவில் கொரோனா என்னும் அரக்கன் மக்களை வதம் செய்து வருகின்றான்.தமிழகத்திலும் சிறுதளவு பதம் பார்த்தான்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்,இந்திய நிறுவனம் உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்கள் கொரோனா அரக்கனின் கொட்டத்தை அடக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

covaxin

அதற்கு பலனும் கிடைத்தது.இந்திய நிறுவனமான “பாரத் பயோ டெக்” கோவாக்ஸின் என்கின்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது.சமீபத்தில்,இது மக்களின் பயன் பாட்டிற்கு வந்தது.முதல் கட்டமாக மருத்துவத்துறையினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

joe-biden-coronavirus

அண்டை நாட்டில் பிரதமரும்,அதிகாரிகளும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.ஏன் இந்திய பிரதமரும்,முதல்வர்களும்,அதிகாரிகளும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவில்லை? என சர்ச்சைகளும் எழுந்தன.

தடுப்பூசி

இதனை அடுத்து, அடுத்தகட்டமாக  இந்திய பிரதமர்,மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்  தடுப்பூசியை  செலுத்திக்கொள்வார்கள் என கூறப்படுகிறது.இது ஒரு புறமிருக்க, தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் இதுவரை 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட்

ஆனால் 42,040 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 907 பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.இவர்களுக்கு யாருக்கும் பக்கவிளைவுகளோ, உடல் உபாதைகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?|வியாபார வளர்ச்சி ஆலோசகர்:

                                  தடுப்பூசியை இவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது|தயாரித்த நிறுவனங்கள் எச்சரிக்கை!


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top