நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் தற்போது துக்ளக் தர்பார் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. அதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் பார்த்திபன்.
இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சீண்டும் விதத்தில் வாக்கியங்கள் இருக்கிறது என்று எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. இதற்கு முன்பே கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதில், எதிர்ப்பு தெரிவித்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முக்கியமானவர். அது சீமான் மற்றும் விஜய் சேதுபதியிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதற்கு பழிதீர்க்கும் வகையில் தான் இப்படி போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்குமோ என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
Also Read: ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் : OTT யில் வெளியாகிறது.
Follow us on Facebook and Instagram: