சென்னை அப்பல்லோ -வில் 7 வயது சிறுமிக்கு சிக்கலான சிகிச்சை : DISCOID MENISCAL SAUCERISATION.
ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது அப்பல்லோ மருத்துவமனை. இங்கு, சமீபத்தில் நடைபெற்ற சிக்கலான சிகிச்சையால் 7 வயது பெண்குழந்தையின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் செல்வி ஜாய்ஸ்மிதா சாண்டோ. மகளின் நடையில் மாற்றம் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அவரது பெற்றோர். ஜாய்ஸ்மிதா சாண்டோ அணைத்து குழந்தைகளை போலவே ஓடி ஆடி விளையாடியவர். திடீரென அவர் நடப்பதற்கு, படி ஏறுவதற்கு சிரமப்பட்டார். அதனால், அவரது பெற்றோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சென்னை அப்பல்லோ டாக்டர்கள் இது டிஸ்காய்டு லேடரல் மெனிஸ்கல் டியர் (DISCOID LATERAL MENISCAL TEAR) என்று கண்டறிந்தனர். இந்த வகை பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிது.
மெனிஸ்கஸ் (மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பு) என்பது முழங்காலைப் பாதுகாக்கும் வகையில் அதிர்வுகள் மற்றும் அசைவுகளை ஏற்கும் நெகிழ்வு தன்மை வழங்குவதாக செயல்படும் மென்மையான குருத்தெலும்பு (CARTILAGE) ஆகும். இரண்டு முழங்காலிலும் 2 C வடிவ பட்டைகள் உள்ளன. அவை பிறை வாடிவிலானவை. இந்த பிரச்னையில், ஒரு டிஸ்காய்டு மெனிஸ்கஸ் தடினமாகவும் இயல்பை விட வேறுபட்ட வடிவத்தையும் அமைப்பையும் கொண்டிருக்கும். இந்த நிலை ஏற்பட்டால், பெரும்பாலும் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இந்த சிறுமிக்கு DISCOID MENISCAL SAUCERISATION என்னும் முறை மேற்கொள்ளப்பட்டது. இது கீஹோல் செயல்முறை மூலம் முழுமையாக செய்யப்பட்டது. குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன கருவி இந்த சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டது.
இப்போது, அந்த 7 வயது சிறுமி அணைத்து குழந்தைகளை போலவும் விளையாடுகிறாள். இந்த, சிக்கலான சிகிச்சையை மேற்கொண்டதற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று அப்பல்லோ குழதைகள் னால மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், சிகிச்சைப்பெற்ற குழந்தை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் கலந்துகொண்டனர். மேலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி கலந்துகொண்டார்.