Main Menu

What’s New?

Connect With Us

Top Tamil Cinema News:

Read Carefully

SHARES

Nayanthara

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்,நயன்தாராவை தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும்.அவரை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல அரசியல் காட்சிகள் பிளான் பண்ணுகின்றன.அவரோ,ஒரு படத்துக்கு 6 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அரசியல் தேவையா?வடிவேலு மாதிரி நம்ம நிலைமை ஆகிடாதா?என்று யோசிக்கிறாராம்.நீங்க யோசித்தது கரெக்ட்டு தான் நயன்.

ரஜினி நடிக்கும் “அண்ணாத்த” படம் பொங்கலுக்கு வராது என்று தெரிகிறது.கொரோனா காரணமாக,ரஜினியின் அடுத்தப் படமும் தள்ளிப்போகும் சூழல்.இதனால் ரஜினியை இயக்க துடிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்,லோகேஷ் கனகராஜ்,கவுதம்மேனன்,வெற்றிமாறன் உள்பட பலரும் அப்செட்,ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை.ரஜினியின் ஆசை நிறைவேறுமா?

“வலிமை” படத்தை ஹிந்தியில் டப் செய்யப்போகிறேன்.அஜித்தை இந்தியளவில் பிரபலப்படுத்த போகிறேன் என்று பில்டப் கொடுக்கிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.”நான் ஏற்கனவே “அசோகா” என்ற ஹிந்திப்படத்தில் நடித்தவன்.எவ்வளவு ஐஸ் வைத்தாலும் அடுத்த கால்ஷீட் போனிகபூருக்கு கிடையாது“என்கிறாராம் அஜித்.அப்போ அடுத்த தயாரிப்பாளர் ரெடி….

Varalaxmi Sarathkumar

விரைவில் அரசியலுக்கு வருவேன்.அப்பா கட்சியில் கண்டிப்பாக சேர மாட்டேன்” என்று பேட்டி அளித்துள்ளார் வரலக்ஷ்மி.”அவர் சொந்தக் கட்சி தொடங்க மாட்டார்.அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை.மாநில கட்சியில் சேர மாட்டார்.தேசிய கட்சியில் சேர அதிக வாய்ப்பு”என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.சேரலாமே!

Suriya,Jyothika,Karthi

மத்திய அரசுக்கு எதிராக,அவர்களது கொள்கைக்கு எதிரான கதைகளில் மட்டுமே இனி சூர்யா,கார்த்தி,ஜோதிகா நடிப்பார்கள்.அவர்களே அந்தப் படத்தை தயாரிப்பார்கள் என்று யாரோ கிளப்பிவிட சிவகுமார் குடும்பத்தினருக்காக ஆன்டி இந்தியன் கதைகளை எழுதி வருகிறார்களாம் பல கதைசொல்லிகள்.அப்போ பிரச்சனைதான் போங்க….

Top