அமெரிக்காவில் மற்றுமொரு நிறவெறிச்செயல் : கோல்டன் குளோப் விருதை திருப்பி கொடுத்த டாம் குரூஸ். 

Tom Cruise Returns His Three Golden Globe Trophies To Join Protest Against HFPA
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் ஒடுக்குமுறை பல நூற்றாண்டுகளாக நடந்தேறி வருகிறது. சமீபத்தில் கூட ஜார்ஜ் பிலாய்ட் என்ற கறுப்பினத்தவரை அமெரிக்க காவலர் ஒருவர் கழுத்தில் காலை வைத்து நெரித்துக்கொன்றார். இந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.  அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அது, அந்நாட்டின் மிகப்பெரிய விருதாக கருதப்படும்  கோல்டன் குளோப் விருது அமைப்பில் நடந்துள்ளது. 
 கோல்டன் குளோப் விருது என்பது அமெரிக்காவில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக கருதப்படும் விருது. இந்த விருதினை ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அஸோசியேஷன் என்கிற அமைப்பு நடத்தி வருகிறது. ஹாலிவுட் மற்றும் டிவிக்களில் சிறந்த கலைஞர்களுக்கு வருடா வருடம் ‘கோல்டன் குளோப்’  விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 90 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 1944-ஆம் ஆண்டு முதல் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்த அமைப்பு மீதுதான் தற்போது குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அஸோசியேஷன் மீது நிறவெறி குற்றசாட்டு சாட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் கடந்த 19 ஆண்டுகளாக கறுப்பினத்தவர்கள் உறுப்பினர்களாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு அந்த அமைப்பின் நிர்வாகிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்காக அங்கு போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. பல இடங்களில் இதற்கான எதிர்ப்பை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 அந்தவகையில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுவரை தான் பெற்ற மூன்று கோல்டன் குளோப் விருதை திருப்பி கொடுத்துவிட்டார். இந்த விஷயத்தில் மக்களுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக கூறியுள்ளார்.  மேலும், உறுப்பினர் குழுவில் மாற்றங்கள் செய்யாவிட்டால் 2022-ம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஒளிபரப்பு செய்யப் போவதில்லை என என்.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்தப் பிரச்சினை பூதாகரமாக ஆனதையடுத்து வரும் ஆகஸ்டு மாதத்தில் அனைத்து வகையான இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் குழுவில் சேர்க்கப்படுவார்கள் என இந்த விருது அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2009-ஆம் ஆண்டு கோல்டன் குளோப் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top