Main Menu

What’s New?

Connect With Us

15 நாட்களில் முழுமையாக குணமாகிவிடும் தைராய்டு!

Read Carefully

SHARES

உணவே மருந்து என்று நம் முன்றொர்கள் கூறினர்.ஆனால் நம் நாட்டின் மீது ஆங்கிலேயர்களின் படையெடுப்பு,மற்றும் அவர்களின் ஆதிக்கம் காரணமாக ஆங்கிலேயர்களின் மருந்துகளை நாம் அருந்த ஆரம்பித்துவிட்டோம்.அது இன்று வரை தொடர்கிறது.இருப்பிலும் அவ்வப்போது நாட்டு மருந்தின் பயன்களும்,பெருமையும்,வெளியே வர தொடங்கி விட்டது…அதன் ஒரு பகுதியாக

15 நாட்களில் முழுமையாக தைராய்டு குணப்படுத்தக் கூடிய இயற்கை முறை ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.இனிமேல் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1. கொத்தமல்லி விதை- 4 ஸ்பூன்

2. மிளகு- 1 ஸ்பூன்

3. நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப

செய்முறை:

1. முதலில் ஒரு இரும்பு கடாய் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வைத்து சூடானவுடன் நான்கு ஸ்பூன் கொத்தமல்லி விதையை போடவும்.

2. அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு சேர்க்கவும்.

3. இரண்டையும் நன்றாக மிதமான தீயில் வறுக்கவும்.

4. நிறம் மாறி வந்தவுடன் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

5. இந்தத் தூளை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

6. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

7. தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது 1 1/2 ஸ்பூன் அளவுக்கு அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும்.

8. தண்ணீர் நன்கு கொதித்து ஐந்து நிமிடம் ஆன பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

9. இப்பொழுது தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகலாம்.

இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் 15 நாட்கள் தொடர்ந்து குடித்துவர தைராய்டு பிரச்சினைகள் குறைந்து விடும். சைனஸ் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தண்ணீரை குடித்து வரும்போது சைனஸ் பிரச்சினை குறைந்துவிடும்.

 

Top