இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணமா இதுதானா ? காஜல் அகர்வால் விளக்கம். 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ல் வெளியான படம் இந்தியன். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமல்ஹாசன் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதன் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இதன், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,  2019 ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.   இப்படத்தில், நடிகர் சித்தார்த், விவேக், நெடுமுனி வேணு ஆகியோர் நடித்திருக்கின்றனர். நடிகைகள், பிரியா பவனி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் போன்றோர் நடிக்கின்றனர். படபிடிப்பும் 60 – 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

shankar

இதற்கிடையில், கமல்ஹாசன் அவர்களின் அரசியல் ப்ரவேசத்தினால் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதன்பிறகு, படப்பிடிப்பில் நடந்த விபத்தால் இருவர் உயிரிழந்தனர். இதனால், சில காலம் படப்பிடிப்பு நின்றுபோனது. அதன்பிறகு, கொரோனாவின் கோரப்பிடியினால் மீண்டும் படப்பிடிப்பு நின்றுபோனது. மீண்டும், தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையம் போட்டியிடுகின்றது. இதனால், படப்பிடிப்பு தாமதமாகிறது. 

இடையில் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவியது. படத்தின் 70% பணிகள் முடிவடைந்ததால் கைவிடும் வாய்ப்பு குறைவு என தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்தது. சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில் படப்பிடிப்பின் தாமதம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், இந்தியன்-2 படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் அமெரிக்காவில் இருந்து வந்து பணியாற்றினர். கொரோனா பாதிப்பால் அவர்கள் மீண்டும் இந்தியா வர இயலாததால் படப்பிடிப்பு தாமதமாவதாக கூறினார்.

இந்தியன்-2 படிப்பிப்பு மீண்டும் தொடங்கப்பட  வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. ரசிகர்கள் பலரும் இதற்காக காத்திருக்கின்றனர். இதுவே எனது விருப்பமாகவும் உள்ளது என்றார்.  இதனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top