இது மக்களின் தோல்வி|மதுரவாயல் தொகுதி!

இது மக்களின் தோல்வி|மதுரவாயல் தொகுதி!

பூத் ஏஜென்ட் தேவை' - பத்மப்ரியாவின் கோரிக்கையும் ம.நீ.ம விளக்கமும் | Story about mnm candidate Padmapriya's Booth Agent Request

“மக்கள் நீதி மய்யம்” கட்சி சார்பாக மதுரவாயல் தொகுதியில்  போட்டியிட்ட பத்மபிரியாவை அவ்வளவு எளிதில் கடந்துவிட்டு சென்றுவிட முடியாது.காரணம் அவர் பெற்ற வாக்குகள்.ஆம்..! 33,401 வாக்குகளை பெற்று திமுக,அதிமுகவிற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.அது மட்டுமில்லை,மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமலஹாசன்,மகேந்திரனுக்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகளை பெற்று  மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.இது சாதாரண விஷயம் அல்ல.

Padma Priya (@Tamizhachi_Offl) | Twitter

25 வயதாகும் பத்மபிரியா,பல சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து போராடியுள்ளார்.இதனால்,இவருக்கு மிரட்டல்களும் வந்துள்ளது.குறிப்பாக சுற்று சூழல் சம்மந்தமாக போராடியுள்ளார்.இதன் காரணமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுற்று சூழல் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.அவரின் உத்வேகத்தை பார்த்து மதுரவாயல் தொகுதிக்கு போட்டியிட  வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெண்கள் பவருக்கு வரணும்!" - சட்டமன்றத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட பெண்கள் | women candidates who contested in TN assembly election 2021 shares their experience

அறிவித்த நாள் முதல் பம்பரமாய் சுற்றி,தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.குறிப்பாக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே இவரின் பிரதான பேச்சாக,ஓர் விழிப்புணர்வாக இருந்தது.அதே போல், அதிமுக,திமுகவின் குறைகளை கூறாது,”நான் எம்.எல்.ஏ” ஆனால் மதுரவாயல் தொகுதிக்கு என்னென்ன செய்வேன்,என்ன திட்டத்தை வைத்துள்ளேன் என்பது போன்ற பேச்சுக்களை  பத்மபிரியாவின் பிரச்சாரத்தில் நம்மால் கேட்க முடிந்தது. அட…இது புது மாதிரியான பிரச்சாரமா இருக்கே? என்று அங்கு கூடியிருந்த மக்கள் பேசிக்கொண்டனர்.

Tamil Nadu's parties are promising a lot of schemes for women. But where are their female candidates?

இருந்த போதிலும்,பத்மபிரியாவின் தோல்வி துரதிர்ஷ்டவசமானது. இந்த தோல்வி அவரது தோல்வி மட்டுமல்ல மதுரவாயல் தொகுதி மக்களின் தோல்வியும் கூட…ஒரு சமூக ஆர்வலர்,அதிமுக திமுக என இரு கட்சிகளுக்கு மாற்று கொண்டுவரவேண்டும்  என்னும்  எண்ணம் கொண்டவர்,ஒரு பெண் அதுவும் 25 வயதுடைய இளம் புரட்சியாளர்,சமூக அவலங்களை மிக துணிச்சலோடு தட்டிக்கேட்பவர்.இத்தகைய ஒரு  வேட்பாளரை தேர்வு செய்யாதது,மக்களின் தோல்வியே..!

இளைஞர்கள் வரவேண்டும்,அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நான்கு சுவற்றிக்குள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் தமிழக மக்களே! நீங்கள் வாக்களித்தால் மட்டுமே பத்மபிரியா போன்ற இளம் வேட்பாளர்கள் வெற்றி பெற முடியும் என்பதனை மறந்து விடாதீர்கள்.அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய இளைஞர்கள் வந்தால்,அவர்கள் மீதே மக்கள் சேற்றை அடிப்பது நியாயமா? தமிழகம் என்று மாற்று அரசியலையும்,மாற்று கட்சிகளையும் தேர்வு செய்ய போகி றார்களோ?தெரியவில்லை. ஆனால், தற்போது பத்மபிரியா போன்ற இளைஞர்கள்,மாற்று அரசியலை முன்னேடுத்து செல்ல தயாராகிவிட்டார்கள்.அதற்கு, மக்களாகிய நாம் ஒத்துழைப்பைக் கொடுத்தால் மட்டுமே இவர்களால் வெற்றி பெற முடியும்..!..!

 

மேலும் படிக்க: 

நஷ்டத்தில் போக்குவத்துறை|பின்னர் ஏன் பெண்களுக்கு இலவசம்?

என்னது காத்து மூலமா கொரோனா பரவுதா!|சிடிசி அதிர்ச்சி தகவல்:

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top