தடுப்பூசியை இவர்கள் போட்டுக்கக்கூடாது|தயாரித்த நிறுவனங்கள் எச்சரிக்கை!
ஒரு வழியாக கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தாச்சு.இருந்தும் அதன் மீதுள்ள அவநம்பிக்கை காரணமாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்ட வில்லை.அயல்நாட்டில் அந்நாட்டு அதிபர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.ஆனால் நம் நாட்டில் இதுவரை அமைச்சர்கள் கூட தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை.விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவில்லை.இது தற்போது வரை பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்,தடுப்பூசியை யார்லாம் தவிர்க்க வேண்டும் என்று தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில் கூறியதாவது:
சில குறிப்பிட்ட வகை மருந்துகள் மீது ஒவ்வாமை உள்ளவர்கள், கடுமையான காய்ச்சல் உள்ளவர்கள்,ரத்தப்போக்கு கோளாறுகள், “பிளட் தினர்” எனப்படும் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ளக்கூடாது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் வழங்குவோர், தடுப்பூசியை போட்டுக்கொள்ள கூடாது.
அதே போல்,ஏற்கனவே தீவிர மருத்துவ கோளாறுகள் இருந்தாலோ அல்லது வேறு தடுப்பூசிகளை சமீபத்தில் செலுத்திக்கொண்டிருந்தாலோ, அதுபற்றி மையத்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரியிடமோ, தடுப்பூசி செலுத்தும் ஊழியரிடமோ, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
இதற்கு முன், குறிப்பிட்ட மருந்துகள், உணவு வகைகளை உட்கொண்டபோது அல்லது தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது, கடும் ஒவ்வாமை ஏற்பட்டு இருந்தால், அது பற்றியும் தடுப்பூசி மைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
தடுப்பூசியின் முதல் “டோஸ்” செலுத்திக்கொண்ட பின், கடுமையான ஒவ்வாமை ஏற்படுபவர்கள், இரண்டாவது டோசை தவிர்க்க வேண்டும்.
தடுப்பூசியை தயாரித்த நிறுவனங்களின் அறிவுரைப்படி நடந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு, கொரோனாவில் இருந்து விடுபட்டு, வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்வோம்!
மேலும் படிக்க: இந்நிலை என்று மாறுமோ|அமைச்சருக்கே நடந்த பரிதாபம்!
திடீர் ஞான உதயம்…..தேர்தல் வருத்துல!