2020 கடந்து வந்த பாதை:
2020 எவராலையும் மறக்கவே முடியாது.ஒட்டுமொத்த உலகையும் கொரோனா ஆட்டிபடைத்து,உலகையே தன் கை வசமாக்கிக்கொண்டது.இவ்வாண்டில்,ஏறத்தாழ 6 மாதத்திற்கும் மேலாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தோம் என்றே கூறவேண்டும்.தொழில்கள்,தொழிற்சாலைகள் என பலவும் இன்றும் மந்தநிலையிலையே இருக்கிறது.குறிப்பாக,பள்ளிகளும்,கல்லூரிகளும் கடுமையாக முடங்கின.தற்போது வரையிலும் கொரோனாவால் மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது நாடு.வருகின்ற “2021” ஆம் ஆண்டு கொரோனா பிடியில் மட்டுமல்லாது,இயற்கை,விவசாயம்,பொருளாதாரம் போன்ற அனைத்துலையும் மீண்டு வர வேண்டி, 2020ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வினை கடந்து வந்த பாதையினை சற்று திரும்பிப் பார்ப்போம்.
ஜன:1
*புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்தன.இது உலகளவில் முதலிடமாகும்.
பிப்:2
*சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 15 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அவர்களில் 4 பேர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
மார்ச்:1
*கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கேரள பாதிரியார் ராபின் வடக்கும் சேரியை பணிநீக்கம் செய்து,போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவு பிறப்பித்தார்.
ஏப்ரல்:20
*சென்னையில் கொரோனவால் உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
மே:29
*கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் பட்டியலில் 9-வது இடத்திற்கு இந்திய முன்னேறியது.
ஜூன்:3
*கேரளாவில் உணவு தேடி ஊருக்குள் வந்த போது அன்னாசி பழத்துக்குள் வைத்து கொடுத்த பட்டாசு வெடித்து கர்ப்பிணி யானை இறந்தது.
ஜூலை:15
*கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு பரப்பிய “கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தர் கைது. ஜூலை 27-ந் தேதி சுரேந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆக:2
*நிலவில் மேற்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் கிரப்பதை நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்சிஜினீயர் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்து கூறினார்.
செப்:9
*சிவசேனா மிரட்டலை மீறி நடிகை கங்கனா ரணாவத் மும்பை திரும்பியிருந்த நிலையில் அவரது பங்களா வீட்டை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்தனர்.
அக்:12
*நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
நவ:7
*4 நாட்களாக இழுபறியுடன் எண்ணி முடிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டார்.இருவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரம் கிராமத்தை பூர்வீ கமாக கொண்டவர் ஆவார்.
டிச:10
*அதிநவீன வசதிகளுடன் ரூ.971 கோடியில்,நாடாளுமன்றத்துக்கு பிரமாண்டமான புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.