Main Menu

What’s New?

Connect With Us

 மக்களின் மீது முதல்வருக்கு திடீர் அக்கறை…?!

Read Carefully

SHARES

Edappadi-Palaniswami

அரியலூர் மாவட்டத்தில் பேசிய முதல்வர்.எடப்பாடி பழனிச்சாமி,கமலை கடுமையாக விமர்சித்தர்.

*திரைப்படங்களில் ஓய்வு அடைந்த பின் கமல் கட்சி தொடங்கியுள்ளார்.அவருக்கு என்ன தெரியும்?

* 70வயதானதாலும்  பட வாய்ப்புகள் குறைந்ததாலும் தற்போது கமல்,கட்சி தொடங்கி உள்ளார்.

*பிக்பாஸ் நடத்துவர்கள் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்?பிக்பாசை பார்த்தல் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது.அதை நடத்துவர்களின் கருத்தை கேட்டால் எப்படி இருக்கும்? பிக்பாசில் அப்படி என்ன இருக்கிறது?அதை போய் கமல் நடத்துகிறார்.

*அவரெல்லாம்  ஒரு கட்சிக்கு தலைவர்னு சொல்ரீங்களே?நாட்டுக்கு நல்லது செய்றது அவரோட வேலையில்லை.கெடுக்குறதுதான் அவரின் வேலை.

big boss kamal

 

*அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தல்,குழந்தைகளும் கெட்டு போய்விடும்.பெரியவர்களும் கெட்டுவிடுவார்கள்.

*ஆக்க பூர்வமான விஷயங்களை “பிக்பாசில்”காட்டு.நதிநீர் இணைப்பை பத்தி காட்டு,விவசாயங்களின் நல்ல திட்டங்களை காட்டு,மாணவ செல்வங்களுக்கு அறிவுரை சொல்லுங்க.

*எம்.ஜி.ஆர் இருக்கும் போது “நல்லநல்ல பிள்ளைகளை நம்பி” என்று பாடினார்.நல்ல கருத்துள்ள படங்களில் நடித்தார்.கமல்,ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடலை பாடியிருக்காரா?கமலின் திரைப்படங்களை பார்த்தால் அதோடு குடும்பம் காலி.என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வரின் தீடீர் அக்கறை சென்னையில்.காமின் கேள்விகள்:

*திரைப்படங்களில் ஓய்வு அடைந்த பின்…………/தமிழக மக்கள் உங்களுக்கா வாக்களித்தார்கள்?நியாயப்படி,எனக்கு இந்த பதவி வேண்டாம் மறு தேர்தல் நடத்துங்கள் என்று தானே சொல்லிருக்க வேண்டும்?

*70வயதானதாலும்  பட வாய்ப்புகள் குறைந்ததாலும்………./ஒருவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.அரசியலுக்கு வர வயது வரம்பு இருக்கிறதா என்ன?சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா?

*பிக்பாஸ் நடத்துவர்கள் எல்லாம் அரசியல் செய்தால்……../மக்களின் மீது உண்மையாகவே அக்கறை இருந்தால்,”பிக்பாசை”முதல்வர் ஏன் தடை செய்யவில்லை?இன்று “பிக்பாசை”குறை கூறும் முதல்வர்,ஒரு கையெழுத்து மூலமாக தடை செய்திருக்கலாமே ?

bigg-boss-tamil-contestant

*அவரெல்லாம்  ஒரு கட்சிக்கு தலைவர்னு சொல்ரீங்களே?……../குறுகிய காலத்திலேயே கமல் கட்சி தொடங்கி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளார்.ஆனால்,இன்றுள்ள அதிமுக யாருடையது முதல்வரே?அதிமுகவின் தலைவர் யார்?

*அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தல்,குழந்தைகளும் கெட்டு………/குழந்தைகளின் மீது அக்கறை காட்டும் முதல்வரே!ஆன்லைன் விளையாட்டால் குழைந்தைகள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்.இதனால்,பல குழந்தைகள் மாண்டுவிடுகின்றன.இதனை அரசு ஏன் தடை செய்யவில்லை,ஏன் தடை செய்யக்கூடாது?இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றார்களே அரசுக்கு தெரியாதா?

*ஆக்க பூர்வமான விஷயங்களை “பிக்பாசில்”காட்டு.நதிநீர் இணைப்பை பத்தி……./மதுவை படிப்படியாக குறைக்கப்படும் என்று தங்கள் கூறியது நினைவில் உள்ளதா?அதற்கான நடவடிக்கைகளை எடுத்தீர்களா?படிப்படியாக என்றால் எப்போது?கால நிர்ணயம் வைத்தீர்களா?மதுவினால்,இன்று குழந்தைகள்,இளைஞர்கள்,பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கின்றார்களே?மதுவை அருந்தி விபத்துகள் நடக்கின்றதே?அதனால்,பல உயிர் பலி நடக்கின்றதே?இதற்கு நடவடிக்கை என்ன?

tasmac

*எம்.ஜி.ஆர் இருக்கும் போது “நல்லநல்ல பிள்ளைகளை நம்பி” என்று………./இனி யாரும் அடல்ட் கண்டன்ட் படங்களை எடுக்கக்கூடாது.சமூகம் சார்ந்த கருத்துள்ள படங்களை மட்டுமே எடுக்க அனுமதி, என சட்டம் கொண்டுவாரு ங்கள்.வெற்றி பெற்ற படங்களுக்கு வரி விதிப்பதை போன்று தோல்வியுற்ற படங்களுக்கு நிவாரண தொகை வழங்குங்கள்.தமிழக அரசே,புதியதாக சென்சார் போர்டு அமைத்து கண்காணியுங்கள்.”ஏ” சர்டிஃபிகேட்டை தடை செய்யுங்கள்.தொலைக்காட்சி,யூடியூப்,அமேசான் போன்ற சமூக வலைதளங்களுக்கு சென்சார் கொண்டுவாருங்கள்.கடும் கட்டுப்பாடுகளை விதியுங்கள்.அதை எல்லாம் செய்யாது கமல் மீது காட்டம் காட்டுவது நியாயமா என்ன?

முதல்வருக்கு கேள்விகளை எழுப்பியதால் சென்னையில்.காம் முதல்வருக்கு எதிரானவர்கள் அல்ல.நடுநிலையோடே கேள்வியை முன்வைக்கிறது.முதல்வர் எடப்பாடி அவர்களை பாராட்டியும் எழுதியுள்ளது சென்னையில்.காம்…..         

  

 

Top