அன்றும் இன்றும் பச்சோந்தி கருப்பையா!
கட்சி தொடங்கி குறுகிய காலத்தில், மிக பெரிய அசுர வளர்ச்சி பெற்று, வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சியாக ‘மக்கள் நீதி மய்யம்’ இருக்கிறது. இத்தேர்தலில் மூன்றாவது அணியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. கணிசமான ஓட்டு வங்கியும் பெரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் மீதே உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் மற்றும் பயிற்சிப் பட்டறை 11.02.2021 அன்று நடைபெற்றது. இதில், பேசிய பழ.கருப்பையா திராவிட கட்சிகளை உரித்து எடுத்து விட்டார். அவர் பேசியதில் இருந்து சிலவற்றை…..
☛ ‘இந்தியன்’ படத்தில் கமல் என்ன செய்தாரோ அதை தான், வன்முறை நீங்கி தான் கட்சியினை தொடங்கி இருக்கிறார். தன் மகனே ஆனாலும், தவறு தவறே என்பாரே, அது போல, நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக, கட்சி தொடங்கி உள்ளார்.
☛ ஊர் கூடி தேர் இழுப்பது போல, கமலின் கட்சியினை அனைவரும் இழுக்க வேண்டும். இது நமக்கான தேர். அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.
☛ அண்ணா, ராஜாஜி, பெரியார் என அன்றைய காலகட்டத்தில், தலைவர்கள் அறிவாளியாகவும், மக்கள் படிக்காது, விவரங்களை அறியாது, பாமரனாக இருப்பான். இன்று ஏறக்கொறைய, அனைத்து மக்களும் படித்தவர்களாகவே இருக்கின்றனர். அப்படியிருக்க, ஸ்டாலின் போன்றவர்களும், பழனிசாமி போன்றவர்களும் எப்படி தலைவர்களாக இருக்க முடிகிறது? அப்படியே உல்ட்டாவாக மாறிவிட்டது, இன்றைக்கு மக்கள் அறிவாளியாகவும், தலைவர்கள் விவரம் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஒரு முரண். இஃது மாறவேண்டும்.
☛ 50 ஆண்டுகால அராஜக திராவிட ஆட்சியினை, மக்கள் எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது?
☛ அன்று காந்தி அழைத்தார், நல்லவன் எல்லாம் ‘நம்மை காந்தி அழைக்கிறார்’ என்று அவருடன் இணைந்தான். கருணாநிதி அழைத்தார், கெட்டவனெல்லாம் நம்மைத்தான் அழைக்கிறார் என்று அவருடன் இணைந்தான், நல்லவன் ஒதிங்கினான். இன்று காந்தியை போல் கமல் அழைக்கிறார், நீங்கள் (மக்களை பார்த்து) கூடியுள்ளீர்கள்.
☛ இவன் டிவி தருவான், அவன் மிஸ்சி தருவான். அதில் இவன் விவரமாணவன், டிவி கொடுத்தால் தனது நிறுவனம் வளரும் என்று மக்களுக்கு இலவசமாக டிவியை கொடுத்துள்ளான்.
☛ எதற்காக இலவசங்கள்? சென்னை துறைமுகம் தொகுதியில், இன்றும் இரவு தூங்க வீடுகள் இல்லாது, விட்டத்தை பார்த்து, தரையில் படுத்து தூங்கும் அவலம் இருக்கிறது.
☛ 20% மக்கள் உணவின்றி இரவில் தூங்க செல்கின்றனர்.
☛ 1 மணிநேரத்திற்கு, 90 கோடி கார்ப்பரேட் சம்பாதிக்கிறான். அப்போது, ஒரு நாளுக்கு எத்தனை கோடிகள், ஒரு வருடத்திற்கு எத்தனை கோடிகள் என கணக்கிட்டுக்கொளுங்கள்.
☛ இதை எல்லாம் சரிசெய்யாது, எதற்கு இலவசங்கள்? நான் இலவசமாக அரிசியை தருகிறேன், அதனை சாப்பிட்டு ஓரமாக படுத்துக்கொள்ள, நான் செய்யும் அநியாயத்தை கண்டுக்கொள்ளாதே, என்பது போல் உள்ளது.
☛ திமுகாவிற்கு, ஒரு கொள்கையும் கிடையாது. அவர்களின் வீட்டில் உள்ள பெண்கள்யெல்லாம் கோவில் கோவிலாக செல்பவர்கள். ஆனால், கடவுள் இல்லை என்று பேசுவான்.
☛ நான் கருணாநிதியுடன், ஊழல் ஒழிந்துவிடும் என்று நினைத்தேன். பின்னர் ஸ்டலின் வந்தார்.’சரி அவரோடு ஊழல், ஒழிந்துவிடும் என்று எண்ணினேன். எல்லாமே பொய்யாக மாறி தற்போது திமுகவில் இன்னொருவரும் வந்துவிட்டார். ஊழல் ஒழியவே ஒழியாதோ என்கின்ற அச்சம் எனக்குள் எழுந்தது.’மக்கள் நீதி மய்யம்’ வந்தது, என் அச்சம் விலகியது.
☛ திமுகவுக்கும், அதிமுகவுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? அதிமுக மக்களின் தோடுனை திருடும், திமுக மக்களின் காதுகளை வெட்டி எடுத்துவிடும். அவ்வளவு கொடியது திமுக…
☛ இரு திராவிட கட்சிகள் சேர்ந்து ஆற்று மணல்களை சுரண்டி, அவைகளை தட்டான் தரைகளாக மாற்றிவிட்டார்கள். மணலை அள்ள அரசுக்கு வெறும் 6000 ரூபாய் கிடைக்கும். நாம், மணலை, 40,000 கொடுத்து வாங்க வேண்டும். இடையில், எத்தனை நபர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்! இவைகளை, தடுத்தாலே வரிகள் இல்லாமலே ஆட்சியை நடத்த முடியுமே!
☛ இதற்கு எல்லாம், மாற்று வேண்டாமா? அந்த மாற்று, “மக்கள் நீதி மய்யமே” இன்னும் எவ்வளவு, நாட்களுக்கு ஊழல் மூட்டைகளை கட்டிக்கொண்டு அழுவது, என பரபரப்பாக தன் பேச்சினை முடித்துக்கொண்டார்.
எல்லாம் சரி…பழ.கருப்பையாவிடம் சில கேள்விகளை முன்வைக்கிறது, சென்னையில் டாட் காம்:
?ராஜாஜியை புகழும், கருப்பையா…முன்னோரு காலத்தில், பார்ப்பனர்களை கடுமையாக விமர்சித்தும், மிக மோசமான கருத்தினை பேசியிருக்காரே?
?50 ஆண்டுகால அராஜக திராவிட ஆட்சியினை, மக்கள் எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது என்று கேள்வி எழுப்பும் கருப்பையா…. நீங்களும் இதே அராஜக திராவிட ஆட்சியில் அங்கம் வகித்தவர்தானே? நீங்கள் எப்படி சகித்துக்கொண்டு இருந்தீர்கள்?
?அன்று இவர்களை ஆதரித்து விட்டு, கருப்பையா எம்.எல்.ஏ ஆனவர்தானே? தற்போது அதன் மூலமாக, மாதம் பென்ஷன் வருகிறதே? இவ்வளவு பேசும் பழ.கருப்பையா பென்ஷனை விட்டுக்கொடுக்க தயாரா?
?இத்தகைய கோவத்தின், மூலமாக ஒரு பொதுநல வழக்கினையாவது தொடர்ந்தாரா? கோவத்தின் பயன் என்ன? என்று ரெங்கராஜ் பாண்டே தந்தி டிவியில் பணியாற்றும் போது கேள்வினை எழுப்பினார். இதற்கு பதில் அளிக்காது கருப்பையா பாதியிலே கிளம்பி விட்டார். இதே கேள்வியை நாமும் முன்வைக்கிறோம்.’நான் இன்னும் 100 கட்சிகளுக்கு மாறுவேன்’ என அன்று ரெங்கராஜ் பாண்டேவிடம் கூறினார்.
இன்னும் எத்தனை கட்சிகளுக்கு பச்சோந்தி போல் தாவுவார் என்று தெரியவில்லை….?!