தளபதி 66 படத்தின் இயக்குனர் இவரா? ரசிகர்கள் குஷி.

தளபதி 66 படத்தின் இயக்குனர் இவரா? ரசிகர்கள் குஷி.
தளபதி 66 – தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்த படமான தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.  இதனை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முடித்துவிட்டு ஜார்ஜியா புறப்பட்டார் விஜய். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு நாடுதிரும்பியது. மேலும், அதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிட்டனர்.  அதற்காக பிரத்யேக செட் அமைக்கப்பட்டது. விரைவில் அதில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வந்துவிடும்.  அந்தவகையில், விஜயின் அடுத்த படமான தளபதி 66  பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 66-ஐ இயக்கப்போவது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2016-ல் கார்த்தி, நாகார்ஜுனா நடித்து வெளியான “தோழா” படத்தை இயக்கியவர். மேலும், மகேஷ் பாபு நடிப்பில் 2019 -ல் வெளியான “மகரிஷி” படத்தை இயக்கியவர். இவர் தற்போது தளபதியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் ராம் சரண் – ஷங்கர் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் வம்சி பைடிபல்லி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், அதிகாரபூர்வ தகவல் கொரோனா பரவல் சற்று குறையும் நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
thalapathy 66
மேலும், இதில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. அப்படி இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த தகவல் வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top