தமிழகத்தில் கொரோனா தாக்கல் அதிகமாகி வருவதால் வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இந்திய முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது கொரோனா பாதிப்பு. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதே நிலைமை தமிழகத்திற்கு வர கூடாதென்று முன்னதாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* திருவிழா, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை.
* வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் இரவு 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி.
* பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை.
* திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
* திரைப்படம்/ சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதி. படப்பிடிப்பில் ஈடுபடும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
* பொழுதுபோக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.
* பேருந்துகளில் மக்கள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
* கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள சில்லரை வியாபார கடைகளுக்கு தடை.
* தமிழகத்தின் அனைத்து பெரிய காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை.
* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி.
* ஷாப்பிங் மால் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
* வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வர இ – பாஸ் அவசியம்.
* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி.
* கல்வி, சமுதாய, கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டுமே அனுமதி.
* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
* டீ கடை, உணவகங்கள் உள்ளிட்டவைகளில் 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து அருந்த அனுமதி. மேலும், இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி.
* மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.
* 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்.

நெறிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் அதிகம் பாதிப்பு உள்ள இடங்களை/ தெருக்களை மூட உத்தரவு. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கட்டுப்பாடுகளில் மது விற்பனைக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
Read More :