தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : தமிழக அரசு அறிவிப்பு. 

tamilnadu government announces new restrictions from may 6 to 20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 21,000-ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. நாள் ஒன்றுக்கு 21,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணாமாக தொற்றின் வேகத்தை குறைக்க சில கட்டுப்பாடுகளை விதிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 6-ந் தேதி காலை முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மேலும், ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு…

* வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

* அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* ரயில்கள், பேருந்துகள், வாடகை டாக்சிகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயக்க அனுமதி.

* வணிக வளாகங்கள் இயங்க தடை.

* தனியாக செயல்படும் மளிகை, காய்கறி விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 மணிமுதல் 1மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

*  மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் தவிர இதரக்கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிப்பு.

* பால் கடை மற்றும் மருந்தகம் உள்ளிட்டவை தொடர்ந்து இயங்க அனுமதி.

* தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.

* உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. பார்சல் சேவை மட்டுமே அனுமதி.

* உள் அரங்குகள், திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்த தடை.

* அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற தடை.

* திரையரங்குகள் 20-ஆம் தேதி வரை இயங்க தடை.

* ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், முடி திருத்தகம் செயல்பட தடை  உள்ளது. மேலும், ஊரக பகுதிகளிலும் அழகு நிலையங்கள் மற்றும் முடி திருத்தகம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

* இறப்பு நிகழ்ச்சிகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதி.

* திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் வரை மட்டுமே அனுமதி.

* மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் காலை 6 மணி முதல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி.

*  இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்க தடை.

* தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்/ ஊழியர்கள் அந்நிறுவனத்தின் அனுமதி கடிதத்துடன் இரவு நேரத்தில் பயணிக்கலாம்.

* ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

 

 

மேலும் படிக்க: 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top