தமிழகத்தில் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடுகள் : எதற்கு அனுமதி உண்டு? இல்லை?

tamilnadu government announces new restrictions from may 6th to 20th

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 21,000-ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. நாள் ஒன்றுக்கு 21,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணாமாக தொற்றின் வேகத்தை குறைக்க சில கட்டுப்பாடுகளை விதிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 6-ந் தேதி காலை முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மேலும், ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளில் எவை எவைகளுக்கு அனுமதி உண்டு? இல்லை? என்பது பின்வருமாறு…

வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

எதற்கு அனுமதி உண்டு?

1.  பால் கடை மற்றும் மருந்தகம் உள்ளிட்டவை தொடர்ந்து இயங்க அனுமதி.

2. தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள்/ ஊழியர்கள் அந்நிறுவனத்தின் அனுமதி கடிதத்துடன் இரவு நேரத்தில் பயணிக்கலாம்.

3. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் வரை மட்டுமே அனுமதி.

4. இறப்பு நிகழ்ச்சிகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதி.

5. தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.

6. உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. பார்சல் சேவை மட்டுமே அனுமதி.

7. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

8. மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் காலை 6 மணி முதல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி.

9. தனியாக செயல்படும் மளிகை, காய்கறி விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 மணிமுதல் 1மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

10. ரயில்கள், பேருந்துகள், வாடகை டாக்சிகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயக்க அனுமதி.

எதற்கு அனுமதி இல்லை?

1. வணிக வளாகங்கள், பெரிய கடைகள், மால்கள் இயங்க அனுமதி இல்லை.

2. திரையரங்குகள் 20-ம் தேதி வரை இயங்க அனுமதியில்லை.

3. மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் தவிர இதரக்கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிப்பு.

4. உள் அரங்குகள், திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்த தடை.

5. அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற தடை.

6. ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், முடி திருத்தகம் செயல்பட தடை  உள்ளது. மேலும், ஊரக பகுதிகளிலும் அழகு நிலையங்கள் மற்றும் முடி திருத்தகம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

7. இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்க தடை.

8. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top