T.RAJENDAR நாளை மனுத்தாக்கல் : தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்.

T.RAJENDAR தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கும் திரு.மன்னன் அவர்கள் செயலாளர் பதவிக்கும் நிற்கின்றனர்.    டி. ராஜேந்தர் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனர் மற்றும் நடிகர். இவர் தற்போது தமிழ்  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். 

இன்று (14.10.2020) செய்தியாளர்களை சந்தித்தார் டி. ராஜேந்தர். அப்போது, கடந்த ஏழு மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பது திரைத்துறைக்கு பேரிழப்பை தந்துள்ளது எனவும் கூறியுள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட்டிருந்தன.  தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் படி வரும் 15 -ஆம் தேதி முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்கலாம் என அறிவித்துள்ளது. இதில் பல விதிமுறைகள் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. வரும் 22 -ஆம் தேதி முதல் தனித்திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

திரையரங்குகள் உள்ளே கேன்டீன் தின்பண்டங்கள் விற்கக்கூடாது. பார்வையாளர்களின் இருக்கை சமூக இடைவெளியுடனும் இருக்க வேண்டும். கூட்டநெரிசலை தவிர்க்க டிக்கெட் கவுண்டர்கள் முழு நேரமும் திறந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.  

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் டிக்கெட் விலை 100 என்றால் அதில் GST வரி 12% மத்திய அரசுக்கும். 8 சதவீதம் LBT எனப்படும் வரியை  மாநில அரசுக்கும் அளிக்கிறது.  டி. ராஜேந்தர்  அவர்கள் தந்த பேட்டியில், மற்ற மாநிலங்களில் அதாவது ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில வரி செலுத்துவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன. 

 

கர்நாடகவில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை லைசென்ஸ் புதுப்பித்தல்  [LICENCE RENEWAL] செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் வருடம் ஒருமுறை அது நடைபெறுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் நீண்டகால இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படுகிறது.  அந்த புதுப்பித்தல் பணியை இந்தாண்டு தமிழக அரசே ஏற்க வேண்டும் இல்லையேல் அதனை ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார். 

T.RAJENDAR நாளை மனுதாக்கல் :

டி. ராஜேந்தர்  அவர்கள் வேலூரில் சொந்தமாக குரல் மற்றும் சிலம்பு ஆகிய இரண்டு திரையரங்குகள் வைத்துள்ளார்.  வரி மட்டும் இல்லாமல் திரையரங்குகள், UFO, QUBE போன்ற நிறுவனங்களுக்கு VPF – மெய் நிகர் பிரதி கட்டணம் [VIRTUAL PRINT FEE]  எனப்படும் ப்ரொஜெக்டருக்கான வரியையும் செலுத்துகிறார்கள். இவாறான, சூழ்நிலையில் எவ்வாறு திரைப்படங்களை வெளியிடுவது என கேள்வி எழுப்பியுள்ளார். 

உலகம் முழுவதும் VPF வரி செலுத்துவது இல்லை. ஆனால் நாம் மட்டும் இன்னும் அதனை செலுத்திவருகிறோம் என கூறியுள்ளார். C-FORM எனப்படும் பார்ம்களை பெறுவது குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளார். 

OTT தளம் வந்தபிறகு திரையரங்குகளின் முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் கூறினார். பெரிய படங்களை மட்டுமே OTT -ல் வெளியிட முடிகிறது. விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும்  விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினார். 

நாளை முதல் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் மனுதாக்கல் நடைபெற இருப்பதால் டி. ராஜேந்தர் மனுதாக்கல் செய்யப்பட இருக்கிறார். 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top