கார்த்தி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “கொம்பன்”. கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார். இப்படத்தை முத்தையா இயக்கியிருந்தார். இவர், குட்டிப்புலி, மருது, கொடிவீரன், தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியவர். சமீபத்தில், புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கி சன் டிவியில் நேரடியாக வெளியிட்டார். இதில், விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது, கொம்பன் படத்தின் இரண்டாம் பாகம் (கொம்பன் 2) உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும், கார்த்தி மற்றும் லக்ஷ்மி மேனன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கொம்பன் படத்தில் ராஜ்கிரண், சூப்பர் சுப்பாராயன், தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2-ஆம் பாகத்திலும் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில், இரண்டாம் பாகம் படங்கள் அதிகமாக வெளிவர தொடங்கியுள்ளன. குறிப்பாக, எந்திரன் இரண்டாம் பாகம் 2.0, விஸ்வரூபம், பில்லா, வேலையில்லா பட்டதாரி, சாமி போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 பாகங்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. மேலும், இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அவற்றில், சில 2-ஆம் பாகம் படங்களுக்கு மட்டுமே வரவேற்பு அதிகமாக கிடைக்கின்றன. சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
கொம்பன் 2- ஆம் பாகத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: