SURIYA, கவுதம் மேனன் இணையும் புதிய WEB SERIES. நடிகர் சூர்யா, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “காக்க காக்க” மற்றும் “வாரணம் ஆயிரம்” படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றன. குறிப்பாக,2003 -ல் வெளியான “காக்க காக்க” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிறகு, 2008 ஆம் ஆண்டு வெளியான “வாரணம் ஆயிரம்” திரைப்படம் சூர்யாவின் நடிப்பிற்கு தீனிபோடும் வகையில் அமைந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் இணையும் படம் பற்றிய தகவல் வெளிவந்தது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு, இருவரும் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு கிட்டவில்லை. இந்நிலையில், சூர்யாவும், கவுதம் வாசுதேவ் மேனனும் இணையும் புதிய படம் ஒன்று விரைவில் தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வந்தது. அதன்பேரில், சத்தம் இல்லாமல் அதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.
இது, வெப்தொடராக தயாராவதாகவும் இன்று முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் அதன் ஒளிப்பதிவாளர் திரு,பிசி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். மேலும், வெப் தொடராக இருந்தாலும் சூர்யா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனோனுடன் இனைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். படப்பிடிப்பில் சூர்யா மிக புத்துணர்ச்சியோடு இருந்ததாகவும் அந்த பதிவில் பிசி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தீபாவளி சிறப்பாக SURIYA நடித்த “சூரரை போற்று” திரைப்படம் OTT ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக சூர்யா களமிறங்கியிருக்கும் இந்த WEBSERIES ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. இந்த சீரிஸ் OTT வெளியாக உள்ளது. இதன், பெயர் மற்றும் வெளியீடு குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Also Read : பாஜகவில் நானா?|நடிகர் சந்தானம் விளக்கம்!